புலித்தோல் டிரெஸ்சில் புல்லரிக்கும் லுக்.. 4 வது முறையாக ஒரே போட்டோ.. ரசிகர்கள் கலாயில் ரணகள நடிகை!
சென்னை: பிரபல நடிகை ஒரே போட்டோவை நான்காவது முறையாக பதிவு செய்ததை அடுத்து ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
கிளாமருக்கு இன்னொரு பெயர் சொல்ல வேண்டுமானாலும் நடிகை ரியா சென்னை சொல்லலாம் தாராளமாக.
அதற்கு அவரது இன்ஸ்டாவை நிரப்பி இருக்கும் திணறடிக்கும் கிளாமர் புகைப்படங்களே சாட்சி.

தாஜ்மஹால் நாயகி
இப்படி போட்டோக்களை பதிவு செய்துவிட்டு, 'எனக்கு மட்டும் ஏன் இந்த கிளாமர் இமேஜ்? வேற ஹீரோயின்களும் தான் கிளாமர் டிரெஸ் போடறாங்க, அவங்களை ஏன் கண்டுக்கலை? என்று கேள்வி வேறு கேட்கிறார் ரியா சென். எப்போதும் கிளாமரில் மிரட்டும் ரியா சென், தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்தவர்தான். இவரை தாஜ்மஹால் படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்திய நம்ம பாரதிராஜா.

சகோதரி ரைமா
பிறகு அர்ஜூனின் அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பின்னர் அவருக்குத் தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. இந்தியில் கவனம் செலுத்தினர். சில் சிலாய், எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். வெப்சீரிஸில் நடித்து வருகிறார் இப்போது. இவரது சகோதரி நடிகை ரைமா சென். இவர் தற்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துவருகிறார்.

ஹாட் போட்டோஷூட்
ரியா சென்னும் ரைமாவும் பிரபல முன்னாள் ஹீரோயின், மூன் மூன் சென்னின் செல்ல மகள்கள். மூன் மூன் சென், தமிழில் 12 பி படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ரியா சென் அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்புவார்கள்.

புலித்தோல் உடை
இப்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோக்களும் ஜிவ்வென இருக்கிறது. புலித்தோல் உடையில் அவர் செக்ஸியாக வெளியிட்டுள்ள போட்டோவுக்கு லைக்ஸும் கமென்ட்ஸும் குவிந்துள்ளன. வீக்கெண்ட் என்பது தாய்லாந்தில் இருப்பது போன்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், பயன்படுத்திகொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். வழக்கம் போல சிலர் அவர் அழகை அப்படி வர்ணித்துள்ளனர்.

ஒரே போட்டோவை
ஒரு நெட்டிசன், 'என்ன ரியா, இந்த ஒரே போட்டோவை ஏன் நாலாவது முறையா போஸ்ட் பண்றீங்க? என்று கலாய்த்துள்ளார். பழசா இருந்தாலும் பார்க்கிற மாதிரி இருக்குல்ல என்று தெரிவித்துள்ளார் இன்னொருவர். என்னா ஸ்டைல், என்னா லுக், நீங்கதான் ஹாட் பெங்காலி அழகு என்று கூறியிருக்கிறார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications