ரெட் ஒயினாம், விஸ்கியாம்.. ஐயையே.. என்ன, பிரபல ஹீரோயினை இப்படி வர்ணிக்க ஆரம்பிச்சுட்டாங்க..?
சென்னை: நடிகை ரியா சென் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கிறார்கள் நடிகர், நடிகைகள்.
தினமும் ஏதாவது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பொழுது போக்கு
இந்த கடினமான காலகட்டத்தில் இது அவர்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரியா சென்னும் ஒருவர். அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். இதற்காக அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லெவலே வேற
இந்நிலையில் இப்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களையும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். சிலர் அதிரடி கமென்ட்களையும் பதிவு செய்துள்ளனர். தங்கள் காதலை தெரிவித்தும் அழகை கண்டபடி வர்ணித்தும், உங்க லெவலே வேற, உங்க அழகுக்கு எதுவுமே ஈடில்லை என்றும் வழக்கம் போலத் தெரிவித்துள்ளனர்.

வர்ணிக்கலாம்
ஒரு நெட்டிசன், போட்டோவை பார்த்ததுமே பேச்சு மூச்சு நின்னுடுச்சு..உங்க அழகை எப்படி வேணாலும் வர்ணிக்கலாம் என்று கூறியுள்ளார். சிலர் காதலை உருகி உருகி தெரிவித்துள்ளனர். நீங்கள் எப்போதுமே தேவதைதான் என்றும் ரெட் ஒயின் மாதிரி இருக்கீங்க என்று சிலரும் வழிந்துள்ளனர். இன்னொரும் விஸ்கி என்று கூறியிருக்கிறார் அவரை.

லவ்வுக்கே காதல்
ஒரு புகைப்படத்தில் பெட்டில் படுத்திருக்கிறார் ரியா. அதைக் கண்ட சிலர், நீங்க உடுத்தியிருப்பது டிரெஸ்தானா? இல்லை போர்வையா? என்று கேட்டுள்ளனர். ஒருவர் கொஞ்சம் ஓவராகவே போய், உங்களை பார்த்தா அந்த லவ்வுக்கே காதல் வரும் போலயே என்று கூறியுள்ளார். அப்படியே சில பிகினி போட்டோக்களை போடுங்களேன் என்று சில நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video

வாய்ப்புகள் இல்லை
தமிழில் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பிறகு அர்ஜூன் நடித்த அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. இந்தியில் கவனம் செலுத்தினர். அங்கு சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











