Rajinikanth - நிறைய படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.. ரஜினிக்கு அது கடைசி படம் இல்லை

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என தகவல் வெளியான சூழலில் புதிய செய்தி ஒன்று பரவியுள்ளது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் டாப் இயக்குநர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக நான்கு படங்களையும் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார். இதனால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டாபோட்டியில் இருக்கின்றனர். அவரது இயக்கத்தில் நடித்தால் கண்டிப்பாக ஒரு ப்ளாக் பஸ்டரோ இல்லை சூப்பர் டூப்பர் ஹிட்டோ தங்களது கேரியரில் சேர்ந்துகொள்ளும் என்ற கணக்குதான் அதற்கு காரணம்.

Riyaz Ahmed About Rajinikanths Last Movie

மெகா ப்ளாக் பஸ்டர் ஆன விக்ரம்: லோகேஷ் கனகராஜின் கிராஃபை இந்த அளவு உச்சத்துக்கு கொண்டு சென்றது கமல் ஹாசனுடன் அவர் இணைந்த விக்ரம் படம். அந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது. அது கமலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே உற்சாகம் கொடுத்தது. குறிப்பாக திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் செய்திருந்த மாயாஜாலம் (எல்சியூ) படத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது.

விஜய்யுடன் இணைந்திருக்கும் லியோ: அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். காஷ்மீரில் படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக லியோ ஷூட்டிங் நடந்துவருகிறது.

Riyaz Ahmed About Rajinikanths Last Movie

லோகேஷ் கனகராஜின் மாஸ் லைன் அப்: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஏற்கனவே கைதி 2 படத்தை இயக்குவார் என்றும், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்தே ஒரு படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவார். அதை முடித்துவிட்டு கைதி 2வை தொடங்குவார் என்ற தகவல் இப்போது பரவுகிறது.

ரஜினிகாந்த்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?: விக்ரம் படத்தின் மெகா வெற்றியை அடுத்து கமலும், லோகேஷ் கனகராஜும் ரஜினியை சந்தித்தனர். அப்போதே லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு ரஜினி விருப்பம் தெரிவித்ததாகவும், அதனையடுத்து ஒன் லைனையும் லோகேஷ் பிடித்துவிட்டார் எனவும் பேசப்பட்டது. ஆனால் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். சூழல் இப்படி இருக்க இப்போது ரஜினி - லோகேஷ் படத்துக்கான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்திருப்பதாக கூறப்படுகிறது.

உறுதிப்படுத்திய மிஷ்கின்: லியோ படத்தில் நடித்திருக்கும் மிஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியுடன் படம் பண்ணுகிறார். அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது என்று ஓபனாகவே கூறியிருந்தார். இதனால் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இதற்கிடையே அந்தப் படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும் பேசப்பட்டது.

Riyaz Ahmed About Rajinikanths Last Movie

புதிய தகவல்: இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பது ரஜினிகாந்த்துக்கு கடைசி படம் இல்லை என கூறப்படுகிறது. அதாவது, ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமது, யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம். ஆனால் அதுதான் கடைசிப் படமா, இல்லையா என்பதை ரஜினி சார் மட்டுமே முடிவு செய்ய முடியும். இன்னும் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என கூறியதாக இணையத்தில் ஒரு தகவல் பரவிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X