நல்லதுக்கு அட்வைஸ் பண்ணினா குத்தமாய்யா.. வில்லன் நடிகர் மீது திடீர் தாக்குதல்.. போலீசில் புகார்!

By

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்கச் சொன்ன பிரபல வில்லன் நடிகர் திடீரெனத் தாக்கப்பட்டார்.

Recommended Video

Riyaz Khanக்கு நடந்த கொடுமை | Lock Down

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த வைரஸ், இத்தாலியிலும் அமெரிக்காவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாடுகளிலும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

அந்த கொடூர வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, இதற்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்காக பல நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கூட்டமாக நின்று

கூட்டமாக நின்று

இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் ரியாஸ்கான், தனது வீடு உள்ள பனையூர் பகுதியில் நேற்று காலை வாக்கிங் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். நடிகர் ரியாஸ்கான், கொரோனாவுக்காக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இப்படி கூட்டமாக நின்று பேசலாமா? என்று கேட்டுள்ளார்.

சரமாரியாகத் தாக்குதல்

சரமாரியாகத் தாக்குதல்

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த கும்பலில் இருந்த ஒருவர், நடிகர் ரியாஸ்கானை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரியாஸ் கான் கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X