கட்டதுரை "ரியாஸ் கானுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : திரைப்படங்களில் கட்டுடல் மேனியுடன் மிரட்டும் போலீஸ் அதிகாரியாகவும், கலங்க வைக்கும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் ரியாஸ்கான்.

பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் இவர் நடித்திருந்தாலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "வின்னர்" திரைப்படம் இவருக்கு "கட்டதுரை" என்ற மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

இவ்வாறு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வரும் இவர் செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளில் குடும்பத்தாருடன் கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

விஜய்யுடன் பத்ரி

விஜய்யுடன் பத்ரி

மலையாளத்தில் வெளியான "சுகம் சுககாரம்" என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ரியாஸ் கான் மலையாள தயாரிப்பாளர் ராசித்-ன் மகனாவார். எனினும் தமிழில் இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்க விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த "பத்ரி" திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே முதல் அறிமுகத்தை பெற்றுத்தந்தது.

இன்றளவும் பிரபலம்

இன்றளவும் பிரபலம்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டும் ரியாஸ்கான், பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக வந்து மிடுக்கான நடிப்பில் மிரட்டியிருப்பார்.விஜய், ரஜினிகாந்த், சூர்யா என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல்வேறு கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "வின்னர்" திரைப்படத்தில் இவரது "கட்டதுரை" கதாபாத்திரம் இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு பிரபலமாக இருந்து வருகிறது.

 கட்டதுரை கதாபாத்திரத்தில்

கட்டதுரை கதாபாத்திரத்தில்

வின்னர் திரைப்படத்தில் இவர் வடிவேலுடன் இணைந்து செய்யும் காமெடி லூட்டிகள் பலரையும் கண்ணில் நீர் வழிய வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரை பலரும் "கட்டதுரை" என அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

அதே போலீஸ் கதாபாத்திரத்தில்

அதே போலீஸ் கதாபாத்திரத்தில்

மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் இவர் ஹிந்தியில் அபே மற்றும் கஜினி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஹிந்தி ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ஹிந்தி கஜினியில் தமிழில் இவர் நடித்த அதே போலீஸ் கதாபாத்திரத்தில் ஹிந்தியிலும் பிரதிபலித்து இருப்பார்.

பொன்னியன் செல்வன்

பொன்னியன் செல்வன்

வில்லன், போலீஸ், குணச்சித்திர கதாபாத்திரம் காமெடி என எந்த வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ரியாஸ்கான் இப்பொழுது தமிழில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் "பொன்னியன் செல்வன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Ponniyin Selvan On Board Details | Maniratnam | Soorarai Pottru
பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

தமிழ் உட்பட பல மொழிகளில் ரசிகர்களைக் கொண்டுள்ள ரியாஸ் கான் செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திரை பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X