தனுஷ் முன்பே எச்சரித்த விஷயம்... இப்போது ரியாஸ் கானுக்கு நடந்துள்ளது..!
சென்னை : அரசாங்கத்தின் பேச்சை மதிக்காமல் ஊர்சுற்றிய இளைஞர்களை கண்டித்தார் நடிகர் ரியாஸ் கான். ஆனால் அவரது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை என்று இளைஞர்கள் சிலர் ரியாஸ்கானை தாக்கியதால் தற்போது அந்த இளைஞர்கள் கைதாகியுள்ளனர் .
Recommended Video
நடிகர் ரியாஸ்கான் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலருக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு செல்ல வலியுறுத்தியுள்ளார். ஆனால் இளைஞர்களோ தெனாவெட்டாக பேசி ரியாஸ்கானை தாக்கியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்கள் எங்கும் பரவி வைரலானது. இதில் என்ன நடந்தது என்பதை விளக்கி ரியாஸ் கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டார். அதில் என்ன நடந்தது என்பதை தெளிவாக விளக்கிய ரியாஸ்கான் இளைஞர்கள் பொறுப்பற்ற முறையில் நடப்பதை தவிர்த்து வீட்டில் இருக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுகொண்டார்.

நடந்த சம்பவத்தில் தேவையின்றி ரோட்டில் நின்ற 10 இளைஞர்கள் மீது தான் தவறு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த ஊரடங்கு தடை காலம் ஆரம்பிக்கும் முன் சரியாக மார்ச் 21 நடிகர் தனுஷ் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷ் இன்றைய இளைஞர்களின் துடிப்பான போக்கை கண்டித்து பேசி அறிவுறுத்தியிருந்தார் .
அதில் இன்றைய இளைஞர்கள் எங்களுக்கு கொரோனா வராது வந்தாலும் நாங்கள் பிழைத்து விடுவோம் என்ற மனநிலை கொண்டே அதிகம் இருக்கிறார்கள். அவர்களை பார்த்து பேசிய தனுஷ் உங்களுக்கு கொரோனா தொற்று வந்தால் பரவாயில்லை என்பது வேறு நீங்கள் இந்த இடத்தில் நோயை பலரிடம் கொண்டு போய் சேர்த்து விடும் வாய்ப்பு பலமடங்கு இருக்கிறது. இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக இறக்க வாய்ப்பு உண்டு. இதனால் அந்த மனநிலையை மாற்றி செயல்படுங்கள் என்று அப்போதே தனுஷ் கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போதோ தனுஷ் சொன்ன படி இல்லாமல் கொஞ்சம் கூட மாற்றத்தை மனதில் எடுத்து வராத இளைஞர்கள் ரியாஸ்கானுடனும் சண்டையிட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளனர். ரியாஸ்கான் காணொளியில் பேசும்போது கூட இப்படி இளைஞர்கள் செய்த காரியம் அவர்களை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளது இதனால் வரவிருக்கும் கடினமான விஷயங்களை அனுபவிக்க போவது உங்களின் அம்மா அப்பாதான் என்று வருத்ததுடன் கூறியிருந்தார்.
ரியாஸ்கான் கடந்த 20வருடமாக தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை சீராகவும் கட்டுகோப்பாகவும் வைத்து வருகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சட்டென்று முடிவெடுத்து ரியாஸ்கான் கூட இளைஞர்களை பதிலுக்கு தாக்கி இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யாமல் எது சரியோ அதை செய்து அவரை சற்று நிமிர்ந்து பார்க்கும்படி வைத்து விட்டார் .

தற்போது நேற்று தமிழக அரசு அறிவித்த படி ஊர்சுற்றி வருபவர்கள் மீது 1லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் 144தடை உத்தரவை மீறியதாக வழக்குபதிவு செய்யபட்டுள்ளது. இதேபோல் 40லட்சம் வரை அபராதம் வசூலிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த மோசமான நிலையில் இளைஞர்கள் கண்டபடி செயல்பட்டு வருவது கொரோனா பாதிப்பை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை மாற்றி வீட்டில் இருக்குமாறு இளைஞர்களை பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











