Shariq Hassan: குடும்பத்தோடு தலை கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஷாரிக்.. வளர்ந்த மகளும் செம போஸ்!

சென்னை: பிரபல நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசன், மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. மரியா கிறிஸ்துவர் என்பதால், இவர்களின் தலை கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்த கமலா காமேஷின் மகள் தான் உமா. இவர் அன்பே சிவம், மௌனகுரு போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக மிரட்டிக்கொண்டு இருக்கும் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவருக்கு தெரிந்த முகமாக மாறினார். இதைத்தொடர்ந்து, டான், ஜகிரி தோஸ்து உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

uma riyas khan shariq hassan maria haasan

திருமணம்: ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததை அடுத்து பெற்றோர் இவர்களின் காதலுக்கு ஒகே சொன்னார்கள். இதைத்தொடர்ந்து, இவர்களின் திருமணம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி, அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

uma riyas khan shariq hassan maria haasan

அண்மையில் யூடியூப் சேனலுக்கு இருவரும் பேட்டி அளித்தனர், அதில் ஜிம்மில் தான் நான் முதன் முதலில் மரியாவை பார்த்தேன்.முதன் முதலில் நான் பார்த்ததும் இவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. மரியாவிற்காகவே தினம் தினம் ஜிம்முக்கு போய் மரியாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கினேன் என்று கூறியிருந்தார். அப்போது பேசிய மரியா, முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால், நான் இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. என் மகள் ஜாரா சந்தோஷமா இருக்கனும் என்று அவளைபத்தி மட்டும் தான் யோசித்தேன். ஷாரிக் என்னைவிட சின்னவன் என்பதால், அவர் காதலிக்கிறார் என்று தெரிந்தும் காதலிக்கிறேன் என்று சொல்லவே இல்லை. ஆனால் என் மகள ஜாராவிற்காக ஷாரிக்கை திருமணம் செய்து கொண்டேன் என்றார்.

uma riyas khan shariq hassan maria haasan

தலை கிறிஸ்துமஸ்: இதையடுத்துஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் தம்பதியுடன் தலை கிறிஸ்துமசை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். இதில், ஷாரிக்கின் அம்மா, அப்பா மற்றும் சகோதரன் மற்றும் 8 வயது மகள் ஜாராவுடன் இருக்கும் போட்டோவை ஷாரிக் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு ஷாரிக் தனது மகளை கட்டி அணைத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X