குழந்தையோடு எப்படி ஏத்துப்பாங்கன்னு பயந்தேன்.. ஆனால், கண்கலங்கிய ரியாஷ் கான் மருமகள்!
சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். தற்போது புதுமண தம்பதிகள் இருவரும் முதன்முறையாக பேட்டி அளித்துள்ளனர்.

சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக கலக்கி வருபவர் ரியாஸ் கான். இவர், நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார். இதைத் தொடர்ந்து, பென்சில், டான் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்: ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆகஸ்ட் மாதம் அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்த நிலையில், இந்த திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஷாரிக், மரியா: திருமணத்திற்கு பிறகு ஷாரிக்கும், மரியாவும் முதன் முறையாக RedNool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், பேசி மரியா, நான் சிங்கிள் மதராகத்தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்து வந்தேன், இதனால், எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்தது. இதனால் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. வருபவர் என்னை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால், என் மகளை ஏற்றுக்கொள்வார்களா என்கிற பயம் இருந்தது. ஆனால், என் மகளை ஷாரிக் ரொம்ப நன்றாக பார்த்துக்கொண்டார். அதைப்பார்த்துத்தான் எனக்கு இவர் மீது காதலே வந்தது. நல்ல கணவரை விட ஷாரிக் நல்ல அப்பாவா இருக்கிறார்.

முதலில் பயந்தேன்: எனக்கு எப்படி என் மகளை ஏத்துப்பங்க என்கிற பயம் இருந்தது ஆனால், அவங்க ஜாராவை அவங்களோட பேத்தியாகவே ஏற்றுக்கொண்டார்கள். எங்க ஷாப்பிங் போனாலும், அவளையும் கூட்டித்தான் போகிறார்கள். அங்கிள் ஷூட்டிங்கில் இருந்தாலும், ஜாரா ஸ்கூலுக்கு போய்ட்டால, வந்துட்டாளா என்று விசாரிக்கிறார். ஷாரிக் என்கிட்ட சொன்னார், இத்தனை வருஷமா நீ ஜாராவை கஷ்டப்பட்டு வளர்த்துட்டா இனிமேல் அவளை நான் பார்த்துக்கொள்கிறேன், அவள் என் மகள் என்றார். இப்போ தான் அந்த பயமே போச்சு என்று மரியா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

ஊர் ஆயிரம் சொல்லும்: அப்போது பேசிய ஷாரிக், என் அப்பா, அம்மாவை பற்றித்தான் முதலில் யோசித்தேன். நான் மாரியா பற்றி விஷயத்தை சொன்னதும் யோசித்தார்கள், அதன் பிறகு வீட்டுக்கு வந்த மரியா, ஜாராவிடம் பேசினார்கள். ஜாராவை பார்த்ததும் அவர்களுக்கு பிடித்துவிட்டது. ஊர் ஆயிரம் விஷயத்தை சொல்லும், அதை பத்தி எனக்கு கவலை இல்லை. என் பொண்டாட்டி, என் மகள் அவ்வளவு தான் என்று ஷாரிக் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.



Click it and Unblock the Notifications











