Riyaz Khan's Son: எல்லாமே அவளுக்காக.. சொகுசு காரை மனைவிக்கு பரிசளித்த ஷாரிக்!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மூத்த மகன் ஷாரிக் ஹாசன், மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஷாரிக் சொகுசு கார் ஒற்றை தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ள வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் ரியாஸ் கான். இவர், சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரியாக நடித்த கமலா காமேஷின் மகளான உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அன்பே சிவம், மௌகுரு போன்ற படத்தில் நடித்துள்ள உமா ரியாஸ் கான், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். இவர்,பென்சில், டான் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

ரியாஸ் கானின் மகன்: ஷாரிக் ஹாசன், ஜிம்முக்கு சென்ற போது தான் மரியா ஜெனிஃபருடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு பெற்றோரின் சம்மதத்தடன் திருமணம் செய்து கொண்டனர். மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும், உமா இந்து மதத்தை சேர்ந்ததால் இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Riyaz Khan shariq haasan mariya
Photo Credit:

ஏற்கனவே திருமணமானவர்: திருமணத்திற்கு பிறகு ஷாரிக்கும், மரியாவும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஷாரிக்கை விட நான் வயதில் மூத்தவள், எனக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஜாரா என்கிற மகள் இருக்கிறாள். நான் சிங்கிள் மதராக கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்து வந்தேன், இதனால், எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்ததால், இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. வருபவர் என்னை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், என் மகளை ஏற்றுக்கொள்வார்களா? என்கிற பயம் இருந்தது. ஆனால், என் மகளை ஷாரிக் ரொம்ப நன்றாக பார்த்துக்கொண்டார். அதைப்பார்த்துத்தான் எனக்கு இவர் மீது காதலே வந்தது. நல்ல கணவரை விட ஷாரிக் நல்ல அப்பாவாக இருக்கிறார் என்றார். இதையடுத்து, மரியாவிற்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்தது, குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷாரிக் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

எல்லாமே என் பொண்டாட்டிங்கு: இந்நிலையில், ஷாரிக் தனது இன்ஸ்டாகிராமில், சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், எல்லாமே அவளுக்காக , என்னவளுக்காக.. என்னைச் சுற்றியிருந்த எல்லாரும் என்னை குழந்தைத்தனம், ரொம்ப விளையாட்டுத்தனம், சீரியஸ் இல்லனு சொல்லி ஓவர்லுக் பண்ணினா நேரத்துல, நீ வந்தா. நான் என்னையே நம்பாத நேரத்தில் கூட, நீ என் மேல நம்பிக்கை வெச்சா.
என் பலவீனமான தருணங்களில் என்ன நீ ஜட்ஜ் பண்ணல... என் மௌனத்தை புரிஞ்சுகிட்ட,
நான் விழுந்த நேரத்தில் கை விடல,"நான் இருக்கேன்"னு சொல்லி என்னை தூக்கி விட்டா. யாரும் பாக்காதா ஒரு வெளிச்சம் நீ,
என்ன பெட்டரா மாத்தி, என் பெஸ்ட் வெர்ஷன் வெளிய கொண்டு வந்தா. இன்னிக்கி நான் யாராக இருக்கேனோ, அது உன்னால மட்டும் தான்.
நீ என் மனைவி மட்டும் இல்ல, என் சிறந்த நண்பன், என் வலிமை, என் எல்லாமே நீ தான். இன்னும் பல வெற்றி இருக்கு, நான் உன்னை காதலிக்கிறேன், பொண்டாட்டி என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X