"நாட்படு தேறல்" தாலாட்டு பாடல் மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்விகா !
சென்னை : ஒரு நாள் கூத்து, மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விகா.
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவால் வெற்றியாளராக மகுடம் சூடினார்.
தற்பொழுது வைரமுத்துவின் எழுத்துக்களில் சரண் இயக்கியிருக்கும் "நாட்படு தேறேல்" தாலாட்டு பாடல் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

அறியப்படும் நடிகையாக
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் மெட்ராஸ். இதில் கார்த்தி, கேத்தரின்தெரசா, கலையரசன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ரித்விகா நடித்து பிரபலம் அடைந்தார். மெட்ராஸ் படம் கொடுத்த அறிமுகம் இவரை தமிழ் ரசிகர்களையே கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி திரைப்படத்தில் நடுத்து தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

வெற்றியாளராக
பெரும்பாலான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரித்விகா ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வர பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு அனைவரிடத்திலும் நற்பெயரை பெற்று தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பிக்பாஸ் வெற்றியாளராகவும் மகுடம் சூடினார்.

தாலாட்டு பாடல்
இப்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிரில் நடித்து வரும் ரித்விகாவின் நடிப்பில் சமீபத்தில் "நாட்படு தேறேல் " என்ற தாலாட்டு பாடல் வெளியாகி அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் பி. சுசிலா, கே எஸ் சித்ரா, ஹரினி ஆகியோரின் குரலில் உருவான இந்த தாலாட்டு பாடல் மூன்று தலைமுறையாக தாலாட்டு மாற்றமடைந்ததை மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது.

மேக்கிங் புகைப்படங்களை
ரித்விகா இதில் லீட் ரோலில் நடித்திருக்க ராம்குமார்,மாஸ்டர் மித்வின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல் மன்னன், அமர்க்களம்,வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இந்த தாலாட்டு பாடலை இயக்கியுள்ளார். பிளாக் அண்ட் வொயிட், கலர் மற்றும் தற்போதுள்ள தலைமுறையினர் 3 விதங்களில் படமாக்கப் பட்ட இந்த தாலாட்டு பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்த தோடு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தலைமுறையினர் பார்க்க வேண்டும்
குறிப்பாக இப்போதுள்ள தலைமுறையினர் அனைவரும் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த தாலாட்டுப் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது . இந்த நிலையில் நடிகை ரித்விகா "நாட்படு தேறேல்" பாடல் உருவான மேக்கிங் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











