கெத்தா போஸ் கொடுத்து சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட நடிகை ரித்விகா !

சென்னை : ஹீரோயினாகவும் அதேசமயம் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகை ரித்விகா.

Recommended Video

ACTRESS RIYTHVIKA INTERVIEW | GUNDU MOVIE | FILMIBEAT TAMIL

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சின்னத்திரையிலும் பிரபலமான இவர் தற்போது விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஸ்டைலா மாஸா கெத்தா புகைப்படம் ஒன்றை பதிவிட்டு சூப்பரான அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார்.

அன்புவின் மனைவியாக

அன்புவின் மனைவியாக

நடிகை ரித்விகா பாலாவின் பரதேசி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும் மெட்ராஸ் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் நண்பன் அன்புவின் மனைவியாக ரித்விகா நடித்து நடிப்பில் அனைவரையும் பூரிக்க செய்திருப்பார்.

முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களிலும் தயாரிக்கும் திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலியில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சின்னத்திரையிலும் பிரபலமான

சின்னத்திரையிலும் பிரபலமான

ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் குணச்சித்திர வேடங்களிலும் தரமான கதைகளிலும் நடித்து தன்னை சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் நிலைநாட்டி கொண்டிருக்கும் ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் பிரபலமானவராக உள்ளார்.

நடனத்தில் பட்டையைக் கிளப்ப

நடனத்தில் பட்டையைக் கிளப்ப

இப்போது விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், எம் ஜி ஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களில் நடித்து வரும் இவர் , பல காலமாகவே சின்னத்திரையில் தோன்றாமல் இருக்க இப்பொழுது பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டும் பங்குபெறும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு நடனத்தில் பட்டையைக் கிளப்ப இருக்கிறார். இந்த சூப்பரான அப்டேட்டை ஸ்டைலா மாஸா கெத்தான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X