பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் !
குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ரித்விகா கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை ரித்விகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரித்விகா. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் வாங்கினார். அதன் பிறகு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
கபாலி படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது ரித்விகாவை பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.

குடும்பப்பாங்கான உடைகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற பெண்கள் எல்லாம் கவர்ச்சியாக உடை அணிந்த நிலையில், ரித்விகா மட்டும் தான் ஹோம்லியாக டிரஸ் செய்தார். பிக் பாஸ் வீட்டிலும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து கொண்டார். இதுவே அவர் டைட்டில் வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

சிகை
டார்ச்லைட், சிகை ஆகிய இரண்டு படங்களில் மட்டும் தான் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்தார். அதுவும் அவர் ஏற்றது பாலியல் தொழிலாளி கதாபாத்திரம் என்பதால் அப்படி நடிக்க வேண்டியதாக அமைந்தது. மற்றபடி படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களாகத் தான் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோஷூட்
இந்நிலையில் ரித்விகாவும் சக நடிகைகளை போல கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். 'உங்களுக்கு ஏன் ரித்விகா இந்த வேண்டாதா வேலை' என அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

அதிருப்தி
மற்ற நடிகைகளின் கவர்ச்சி போட்டோஷூட்களை ஒப்பிடும் போது ரித்விகாவின் போட்டோக்கள் மிக சாதாரணமானவை தான். ஆனால் அவரும் இந்த லைனில் வந்திருப்பது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேற வழியில்லை
பிக் பாஸ் டைட்டிலை வென்றும் கூட ரித்விகாவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதைத்தவிர சொல்லிக்கொள்ளும்படியாக அவருக்கு படங்கள் ஏதும் இல்லை. எனவே தான் இனி பிக் பாஸை நம்பி பயனில்லை, நாமே ஏதாவது செய்தால் தான் உண்டு என இந்த ரூட்டில் இறங்கிவிட்டார் போலும்.

யாஷிகா
பிக் பாஸ் சீசன் 2வில் ரன்னர் அப்பாக வந்த ஐஸ்வர்யா தத்தாவும், இன்னொரு போட்டியாளரான யாஷிகாவும் தொடர்ந்து தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது ரித்விகாவும் அவர்களைப் போல் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி விட்டாரா என அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











