திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கா?: ரித்விகா கோபம்
சென்னை: தன் திருமணம் பற்றி வெளியான செய்திகளை பார்த்து ரித்விகா கோபம் அடைந்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரித்விகா ஒருவரை காதலிப்பதாகவும் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சு கிளம்பியது.
இதையடுத்து தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்று நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் ரித்விகா.

நடிப்பு
திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்வது கணவரின் கையில் உள்ளது என்று ரித்விகா தெரிவித்தார். திருமணம் செய்து கொண்டாலும் நடிப்பை தொடர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தனது திருமண செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரித்விகா.

ரித்விகா
திருமணம் என்று சொன்னேனே தவிர நடிப்புக்கு முழுக்கு போடுவதாக நான் கூறவில்லை. அப்படி இருக்கும்போது நான் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக வெளியான செய்திகளை பார்த்து வருத்தமாக உள்ளது என்கிறார் ரித்விகா.
அறிவுரை
திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்து நெட்டிசன்கள் ரித்விகாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள். அவர் பாலியல் தொழில் செய்யும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பதை தவிர்க்குமாறு கூறியுள்ளனர்.
வாழ்த்து
ரித்விகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் என்ன ட்வீட் போட்டாலும் கலாய்ப்பவர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எல்லாம் ரித்விகா கண்டுகொள்வது இல்லை.


Click it and Unblock the Notifications











