பழிக்கவும் ரஜினி பிழைக்கவும் ரஜினியா? ஆர்ஜே பாலாஜியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

By Shankar

Recommended Video

பழிக்கவும் ரஜினி..! பிழைக்கவும் ரஜினியா?-வீடியோ

சென்னை : துபாயில் இன்று நடைபெற உள்ள 2.0 ஆடியோ வெளியீட்டு விழாவில், ஆர்ஜே பாலாஜி தொகுத்து வழங்கப்போவதாக வந்துள்ள தகவல் அறிந்த ரஜினி ரசிகர்கள், சமூகத் தளங்களில் பொங்கி எழுந்துள்ளனர்.

லைக்கா நிறுவனத்திற்கு தொகுப்பாளர்கள் வேறு யாருமே கிடைக்கவில்லையா? என்று கேள்விகளும் எழுப்பியுள்ளனர். காரணம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் இந்த ஆர்ஜே சொன்ன கமெண்டுகள். இவைதான் ரசிகர்களின் ஆவேசத்திற்கு காரணம்.

ரஜினிக்கு வாக்களிக்க மாட்டேன்

ரஜினிக்கு வாக்களிக்க மாட்டேன்

"ரஜினி அரசியலுக்கு வந்தால் நான் வாக்களிக்க மாட்டேன்' என்று ஆர்ஜே பாலாஜி கருத்து தெரிவித்து இருந்தார். அதோடு நிறுத்தவில்லை இந்த ஓட்டவா நாராயணன். ரஜினிக்கு வயதாகிவிட்டது, அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றெல்லாம் கூறியிருந்தார், சென்னை வெள்ளத்தில் நாலு நாட்களும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கடைசி ரெண்டு நாட்களும் வந்து நின்ற இந்த சமூகப் போராளி!

வேண்டாம் இந்த பாலாஜி

வேண்டாம் இந்த பாலாஜி

இப்போது எந்த முகத்தோடு ரஜினி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளராக மேடை ஏறப் போகிறார்? இந்த பாலாஜியை தவிர்த்திருக்க வேண்டும்... யாராவது ஒரு ஹீரோவிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கலாம்," என வெளுத்துக் கொண்டிருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

இயற்கைதானே...

இயற்கைதானே...

ரஜினியை பழித்துப் பேசிய ஆர்ஜே பாலாஜிக்கு, அவருடைய அதிமுக்கியமான பட ஆடியோ விழாவில் தொகுத்து வழங்கும் வாய்ப்பை கொடுத்தால், ரசிகர்கள் கோபப்படுவது இயற்கைதானே!

மன்னிச்சி தொலைப்போம்

மன்னிச்சி தொலைப்போம்

ஆனாலும் சிலர், 'அட போங்கப்பா, தலைவர் மன்னிச்சு விட்டுட்டாரு, நாமளும் கண்டுக்க வேண்டாம்' என்றும் கூறியுள்ளனர்.

நல்லதே செய்வோம்

நல்லதே செய்வோம்


"நம்ம தலைவர் மாதிரியே கெட்டது செய்பவர்களுக்கு, அவர்கள் வெட்கி தலை குனியும் அளவுக்கு, நல்லது செய்து விடலாம் விடுங்க," என்பது மூத்த ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ள கருத்தாகும்.

- ‘ரைட்' பாண்டியன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X