twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    LKG: சபாஷ் ஆர்ஜே பாலாஜி... எல்கேஜி பட லாபத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் பாருங்க!

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் இருந்து பத்து அரசு பள்ளிகளை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    எல்.கே.ஜி பட லாபத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் ஆர்ஜே பாலாஜி- வீடியோ

    சென்னை: எல்கேஜி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதில் இருந்து தனக்கு வரும் வருமானத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பத்து அரசு பள்ளிகளை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.

    ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த எல்கேஜி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து படக்குழுவினர் நேற்று இந்த வெற்றியை கொண்டாடினர்.

    அப்போது பேசிய ஆர்கே பாலாஜி, தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி கூறினார். மேலும் அந்த படத்தின் மூலம் தனக்கு கிடைக்கும் தொகையை வைத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 10 அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

    என் மீது நம்பிக்கை

    என் மீது நம்பிக்கை

    இதுகுறித்து அவர் பேசியதாவது, "என் மேல் நான் வைத்த நம்பிக்கையை என்னுடன் இருந்தவர்கள் கூட வைக்கவில்லை, ஐசரி கணேஷ் சார் நம்பிக்கை வைத்தார். இதுவரை பட்ஜெட் விஷயத்தில், செலவு செய்த விஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை.

    ஜேகே ரித்தீஷ்

    ஜேகே ரித்தீஷ்

    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர் ஜேகே ரித்தீஷ். சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து இந்த படத்தை பார்த்து விட்டு, சிவாஜி ஃபிலிம்ஸிக்கு படம் பண்ண சொன்னார் ராம்குமார் சார். அவர் கேட்டது என் பாக்கியம்.

    நான்கு படங்களில் நாஞ்சில் சம்பத்

    நான்கு படங்களில் நாஞ்சில் சம்பத்

    நாஞ்சில் சம்பத் சார் மீது இருந்த கறை இந்த படத்தின் மூலம் துடைத்தெறியப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட ஹீரோவுக்கு 310 ஸ்கிரீன்ஸ் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி.

    பள்ளிகளை தத்தெடுக்க முடிவு

    பள்ளிகளை தத்தெடுக்க முடிவு

    அதை சாத்தியப்படுத்திய சக்திவேலன் சாருக்கும் நன்றி. படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஐசரி கணேஷ் சார் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இந்த படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம்" என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.

    நிழல் நிஜமானது.. மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' படத்தின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை!நிழல் நிஜமானது.. மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' படத்தின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை!

    English summary
    While speaking in the success meet of LKG, actor RJ Balaji said that he has decided to adopt ten schools in Gaja cyclone affected areas.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X