‘பிளஸ் 2-ல் ஃபெயிலானவன் நான்’..அடடே ஆர்.ஜே.பாலாஜியின் தன்னம்பிக்கை மெசேஜ் ..யாருங்க சொல்வாங்க இப்படி?

சென்னை : நடிகர், தொகுப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையாளராக உள்ளார் ஆர்ஜே பாலாஜி.

Recommended Video

RJ பாலாஜியின் தன்னம்பிக்கை மெசேஜ் ..யாருங்க சொல்வாங்க இப்படி?

இவர் அடுத்தடுத்து எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் தற்போது வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் 10வது மற்றும் 12வது வகுப்பு எக்சாம் ரிசல்ட் வந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆர்ஜே பாலாஜி அட்வைஸ் கூறியுள்ளார்.

பன்முகத் திறமை

பன்முகத் திறமை

நடிகர், தொகுப்பாளர், இயக்குநர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆர்ஜே பாலாஜி. இவரது இயக்கத்தில் எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் சமீபத்தில் வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் ரிலீசாகியுள்ளன. இந்தப் படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

 வீட்ல விசேஷம் படம்

வீட்ல விசேஷம் படம்

வீட்ல விசேஷம் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாகியுள்ளார் அபர்ணா பாலமுரளி. படத்தில் மேலும் ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். ஆர்ஜே பாலாஜியின் அம்மா ஊர்வசி, வயதான காலத்தில் கர்ப்பமாவதும் அதையொட்டிய கதையும், படத்தின் கதைக்களமாகியுள்ளன.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

இந்தப் படத்தில் காமெடியையும் சிறப்பாக சேர்த்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. வீட்ல விசேஷம் கதையில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி சிறப்பாக நடித்ததன்மூலம் இந்தக் கதையை சிறப்பாக்கியுள்ளனர். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தை சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியுள்ளார்.

சத்யராஜ் நன்றி

சத்யராஜ் நன்றி

பாலிவுட் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி தமிழ் மக்களை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தன்னை சிறப்பாக மற்றும் வித்தியாசமாக காட்டியதற்காக முன்னதாக நடிகர் சத்யராஜ் ஆர்ஜே பாலாஜிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அமாவாசையாக நடித்திருந்த தன்னை இப்படி ஒரு கேரக்டரில் நடித்த வைத்ததாக ஆர்ஜே பாலாஜிக்கு அவர் பாராட்டு தெரிவித்திருந்தார்.

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு அறிவுரை

இன்றைய தினம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ரிசல்ட் வந்துள்ள நிலையில், பல மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

பச்சை சட்டைக்கு அறிவுரை

பச்சை சட்டைக்கு அறிவுரை

தம்பி, தங்கச்சி, பச்சை சட்டை என்று தன்னுடைய வீடியோவை துவக்கியுள்ள ஆர்ஜே பாலாஜி, இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஏதாவது சப்ஜெக்டில் பெயில் ஆனால், இத்தோடு வாழ்க்கை முடிந்தது என்று கூறுபவர்கள் முகத்தில் பஞ்ச் விடவும் அவர் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

கணக்கு பாடத்தில் பெயில்

கணக்கு பாடத்தில் பெயில்

ஏனென்றால் +2 மதிப்பெண்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றால் இங்கு பலருக்கு வாழ்க்கையே இருக்காது என்றும் அதற்கு சிறப்பான உதாரணம் தான்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் +2வில் கணக்குப் பாடத்தில் 40 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து பெயிலானதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சப்போர்ட்டாக இருந்த குடும்பத்தினர்

சப்போர்ட்டாக இருந்த குடும்பத்தினர்

ஆனால் தன்னுடைய குடும்பத்தினர் அந்த நேரத்தில் சப்போர்ட்டாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல தற்போது ரிசல்ட்டை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரும் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கொஞ்சம் தேடினால் அவர்களுக்கான கோர்ஸ்களை கண்டுபிடித்து அவர்களின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X