அடுத்த மிரட்டலுக்கு தயாரான ஆர்.ஜே.பாலாஜி.. சூர்யாவின் கருப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பயங்கரமா இருக்கே!
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து "சூர்யா 45" திரைப்படத்திற்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, சிவாடா, யோகி பாபு என நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில்,சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெளியானது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், மோசமான விமர்சனத்தால், தோல்வியை சந்தித்தது. கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது இப்படத்தில் இடம் பெற்ற ஆத்தி சந்தனக்கட்ட பாடல் பலரை ஆட்டம் போட வைத்தது.

கருப்பு: தற்போது,சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மௌனம் பேசியதே, ஆறு படத்திற்கு பிறகு த்ரிஷா இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சூர்யா, கருப்பு சட்டை, வேட்டியில் வாயில் சுருட்டை வைத்துக்கொண்டு மாஸாக இருக்கிறார். சூர்யாவின் பிறந்த நாளை கொண்டப்பட உள்ள நிலையில், இன்று படக்குழு போஸ்டரை வெளியிட்டு நாளை காலை 10 மணிக்கு படத்தில் டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 46: கருப்பு படத்தை தொடர்ந்து வாத்தி , லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கி உள்ளது. தனித்துவமான கதை சொல்லுவதில் பெயர் பெற்ற வெங்கி அட்லூரி, தற்போது சூர்யாவுடன் கரம் கோர்த்து இருப்பதால் இப்படத்தின் மீதா எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதில், பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறிய மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











