CM விஜய்யைச் சந்தித்த RJ பாலாஜி.. விஜய் ஆண்டனி.. அடடே அவங்க சொன்னதைப் பாருங்க!

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர். இந்தச் சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின்கவனம் ஈர்த்து, வைரலாகி வருகின்றன.

"அனைத்தையும் தொடங்கி வைத்தவருடன் ஒரு சந்திப்பு" - நெகிழ்ந்த ஆர்.ஜே. பாலாஜி!
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது மனைவியுடன் இணைந்து முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "என்னுடைய 'கருப்பு' படத்திற்கான அனைத்தையும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் ஒரு சந்திப்பு!!! வாவ்...! இப்போது அவரை தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக சந்திப்பது முற்றிலும் கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயமாக, பிரம்மிப்பாக உணர்கிறேன். அதே அன்பு, அதே அரவணைப்பு, அதே கனிவு மற்றும் அமைதி. எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி என் அன்பிற்குரிய விஜய் சார்" என நெகிழ்ச்சியுடன் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.

RJ Balaji and Vijay Antony Meet CM Vijay Their Heartfelt Messages Go Viral

விஜய் ஆண்டனி: அதேபோல், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இன்று நமது மாண்புமிகு முதலமைச்சரைச் சந்தித்து, அவருடன் சில அற்புதமான நிமிடங்களைச் செலவிட்டேன். எப்போதும் போல அவரது நேர்மறையான அணுகுமுறையையும், அசாத்திய ஆற்றலையும் நேரில் கண்டது எனக்கு உண்மையிலேயே பெரும் உத்வேகத்தை அளித்தது.

மனவலிமை: அவர் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்யவும், இந்தச் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வரவும் தேவையான மனவலிமை, ஞானம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அந்தப் பிரபஞ்சம் அவருக்கு அள்ளி வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டு, முதலமைச்சருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

RJ Balaji and Vijay Antony Meet CM Vijay Their Heartfelt Messages Go Viral

சினிமா பிரபலங்கள்: திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யை, சினிமா பிரபலங்கள் தொடர்ந்து நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி வரும் நிலையில், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் விஜய் ஆண்டனியின் இந்தச் சந்திப்புகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை தவெகவினர் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X