அரசியல் பிரவேசமா? மே 18-ம் தேதி அறிவிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி!
Recommended Video

சென்னை : சமீபத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு... ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரம் தான். அந்த விளம்பரத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சிக் கொடியின் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி ஃபேஸ்புக்கில் வெளியிட ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் பிரவேசத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் பரவியது. அதையடுத்து, விசாரித்ததில், கன்னடத்தில் வெளியான 'ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்' எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், அதில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

அந்தப் படத்தைத் தொடங்கும்போது ப்ரொமோஷனுக்காக இந்த அரசியல் கட்சி விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. 'இளைஞர்களை வழிநடத்த.. தமிழகத்தில் மாற்றம் காண..' என ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்று எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் மே 18 எனும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்றைய தேதியில், கன்னட படத்தின் தமிழ் ரீமேக் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மே 18-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜியே அதிகாரப்பூர்வமாக இந்தப் படத்தில் நடிப்பது பற்றித் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் போதாதா என ஆர்.ஜே.பாலாஜியின் வருகையை நினைத்து பயந்தவர்களுக்கு இந்தச் செய்தி ஆறுதல் தந்திருக்கிறது. மே 18-ம் தேதி இது உறுதியாகும்.


Click it and Unblock the Notifications











