மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக நடிக்க இருந்த நடிகை.. ஆர்ஜே பாலாஜி பளிச்!

சென்னை :நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட்டானது.

இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். ஊர்வசி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

சாமியார்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய இந்தப் படத்திற்கு ரசிகர்களை அதிகமான ஆதரவை கொடுத்து வெற்றிப் படமாக்கினர்.

ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜே பாலாஜி

கிரிக்கெட் வர்ணனையாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை காட்டி கலக்கி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. காமெடியனாக அறிமுகமான இவர், தொடர்ந்து எல்கேஜி படம் மூலம் தன்னை ஹீரோவாகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார். அரசியலை விமர்சித்த இந்தப் படம் ஆர்ஜே பாலாஜிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

காமெடியனாக அறிமுகம்

காமெடியனாக அறிமுகம்

கிரிக்கெட் வர்ணனையாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை காட்டி கலக்கி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. காமெடியனாக அறிமுகமான இவர், தொடர்ந்து எல்கேஜி படம் மூலம் தன்னை ஹீரோவாகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார். அரசியலை விமர்சித்த இந்தப் படம் ஆர்ஜே பாலாஜிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

மூக்குத்தி அம்மன் படம்

மூக்குத்தி அம்மன் படம்

இதில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்தப் படம் போலி சாமியார்களை களையெடுக்கும் கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இணை இயக்குநராகவும் இணைந்து அதகளம் செய்திருந்தார்.

சிறப்பான ரன் பேபி ரன் படம்

சிறப்பான ரன் பேபி ரன் படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் ரன் பேபி ரன் என்ற படம் த்ரில்லர் ஜானரில் வெளியானது. இந்தப் படமும் ஆர்ஜே பாலாஜியின் வித்தியாசமான பரிணாமத்தை ரசிர்களிடையே வெளிப்படுத்தியது. மிகச்சிறந்த வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது. தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அம்மனாக முதலில் நடிக்கவிருந்த நடிகை

அம்மனாக முதலில் நடிக்கவிருந்த நடிகை

இதனிடையே மூக்குத்தி அம்மன் படத்தில் முன்னதாக நயன்தாராவை நடிக்க வைக்கும் ஐடியா இல்லை என்று தனது சமீபத்திய பேட்டியில் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த ரோலில் நடிக்க அனுஷ்காவை தான் அணுகியதாகவும் சூட்டிங்கிற்கு வர அவர் சம்மதித்தாலும் 8 மாதங்கள் ஆகும் என்று கூறியதாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

கதையை கேட்டவுடன் ஓகே செய்த நயன்

கதையை கேட்டவுடன் ஓகே செய்த நயன்

அவ்வளவு நாட்கள் காத்திருக்க முடியாது என்பதால் தொடர்ந்து நயன்தாராவை அணுகியதாகவும் கதையை கேட்டவுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டதாகவும் ஆர்ஜே பாலாஜி மேலும் கூறியுள்ளார். இந்த ரோல், நயன்தாராவை வித்தியாசமாக ரசிகர்களுக்கு காட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X