ஒரு பெண்ணை போய் ஷூவை நக்க சொல்றான்.. இதெல்லாம் ஒரு படமா?.. அனிமல் படத்தை விளாசிய ஆர்ஜே பாலாஜி!
சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திரிப்தி திம்ரி, பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை அடைந்தது. ஆனால், இதெல்லாம் ஒரு படமா என தி கோட் படத்தின் கேமரா மேன் முதல் பல சினிமா பிரபலங்கள் அனிமல் படத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தை புரமோட் செய்த ஆர்ஜே பாலாஜி யூடியூபுக்கு அளித்த பேட்டியில் அனிமல் படத்தை நான் பார்க்கவே இல்லை என்றும் அந்த படத்துக்கு எல்லாம் கை தட்டுவதை பார்த்து விட்டால் எனக்கே தெரியாமல் அதுபோன்ற காட்சிகளை என் படத்தில் வைத்து விடுவேனோ என்கிற பயம் இருக்கு என்றார்.

ஆர்ஜே டு ஹீரோ: பிக் எஃப்எம்மில் ஆர்ஜேவாக பேசி அசத்தி வந்த ஆர்ஜே பாலாஜி எதிர்நீச்சல் படத்தில் கேமியோ ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் காமெடியனாக அறிமுகமான இவர், வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், நானும் ரவுடி தான், ஜில் ஜங் ஜக், முத்தின கத்தரிக்காய், தேவி, கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம், ஸ்பைடர், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தில் இருந்து ஹீரோவாக மாறிவிட்டார்.
எல்கேஜி முதல் சிங்கப்பூர் சலூன்: ஹீரோவாக ஆர்ஜே பாலாஜி நடித்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. எல்கேஜி படத்தில் அரசியல் நய்யாண்டி காமெடிகளை சரவெடியாக அடித்து நொறுக்கி இருந்தார். அடுத்து நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான படத்தை கொடுத்திருந்தார். வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி அடுத்து கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் அந்த படத்தின் ரிலீசுக்காக தொடர்ந்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அனிமல் படம் பார்க்கவே இல்லை: சமீபத்தில் பேட்டி ஒன்றில் அனிமல் படம் சொல்லுங்க ஆர்ஜே பாலாஜி என்கிற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அனிமல் படத்தை பார்க்கவே இல்லை. பெண்களை அடித்து துன்புறுத்துவதை பார்த்து ரசிப்பது, ஷூவை எல்லாம் நக்க சொல்றான்னு சொல்றாங்க அதையெல்லாம் எப்படி பார்த்து கை தட்டுறாங்கனே தெரியல.. ஒருவேளை நான் அதையெல்லாம் பார்த்து என் படத்தில் தப்பித் தவறி கூட அந்த மாதிரி சீனை வைத்து விட்டால் நல்லாவா இருக்கும். சினிமாவை சினிமாவா பார்க்கணும், கிராஃப்ட்டை பார்க்கணும் என சொல்வதெல்லாம் மடத்தனம் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவை விளாசித் தள்ளி விட்டார்.
ஓடிடி ரிலீஸ்: அதிகளவில் ஆபாச காட்சிகள் நிர்வாணமாக படுக்கையறையில் ஹீரோயினுடன் உல்லாசம் என ராஷ்மிகா மந்தனா, திரிப்தி திம்ரி என ரன்பீர் கபூர் நடித்துள்ள படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்து வெளியாக உள்ள சிங்கப்பூர் சலூன் தியேட்டரில் அடுத்த வாரம் வெளியாகும் நிலையில், ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











