ஆர்ஜே பாலாஜிக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை : ரேடியோக்களில் தனது வித்தியாசமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர்ஜே பாலாஜி "டேக் இட் ஈசி" என்ற நிகழ்ச்சியில் கிராஸ் டாக் என்ற பிராங் ஷோவில் பல நட்சத்திரங்களை கலாய்த்து மிகவும் பிரபலமானவர்.

இவர் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.

ஜூன் 20ம் தேதியான இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

பிம்பம்

பிம்பம்

காலையில் எழுந்த உடனேயே சுப்ரபாதம் மூலம் ரேடியோவை கேட்க ஆரம்பிக்கும் நம்மில் பலருக்கும் ரேடியோ ஜாக்கி என்றாலே பலவிதமான முகங்கள் எண்ணங்களில் வருவதுண்டு. கலகலப்பாகவும், காமெடியுடன் அதே சமயம் அழகான உச்சரிப்புடனும் கேட்கும் ஆர்ஜே-க்களின் குரல்களை வைத்துதான் ஒவ்வொருவரும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்து அந்தக் குரலுக்கு மக்கள் தங்களுக்குள் வடிவம் கொடுத்து கொள்கிறார்கள்.

கலக்கல்

கலக்கல்

இந்நிலையில் பிரபல ரேடியோ அலைவரிசை நிறுவனத்தில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தவர் ஆர்ஜே பாலாஜி எப்போதும் மற்றவர்களிடமிருந்து தனித்து அறியப்பட்டார். தனது வேகமான பேச்சாலும் கலக்கல் காமெடியினாலும் தனக்கென ஒரு பெயரை பெற்று வந்தவர் ஆர்ஜே பாலாஜி.

பிராங் ஷோ

பிராங் ஷோ

எல்லோரும் ஒரே ஃபார்மில் நிகழ்ச்சியை தொகுத்து வந்த பொழுது இவர் மட்டும் வித்தியாசமாக பிராங் ஷோ என்ற ஒன்றை கையிலெடுத்து அதில் பிரபலமானார். தினமும் இவர் தொகுத்து வழங்கிய டேக் இட் ஈஸி என்ற நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரையும் பெயர் அறியப்படாத நபராக தொலைபேசியில் பேசி அவர்களை கண்டபடி கலாய்ப்பது போன்ற வித்தியாசமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பின் அதன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

காமெடியனாக

காமெடியனாக

பல மேடைகளில் ஊக்கமூட்டும் பேச்சாளராகவும், பிரபல நிகழ்ச்சிகளையும், கிரிக்கெட் போட்டிகளையும் தனது சிறப்பான காமெடி பேச்சால் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். பின்னாளில் படங்களில் தோன்ற ஆரம்பித்த இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, வல்லினம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வந்து சென்ற இவர் பின் வடகறி என்ற படத்தின் மூலம் முழு காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.

விருது

விருது

அதை தொடர்ந்து இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற படத்தில் காமெடியனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார். இந்த படத்தில் இவரது காமெடி மிகவும் பேசப்பட்ட நிலையில் இந்த படத்திற்காக இவர் சிறந்த காமெடி நடிகருக்கான விருதையும் பெற்றார்.

கதாநாயகனாக

கதாநாயகனாக

இப்படி படிப்படியாக ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் பல படங்களில் காமெடியனாக நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் LKG என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்து தனது திரை வாழ்க்கையில் அடுத்த அடிக்கு முன்னேறினார்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

LKG படம் சூப்பர் ஹிட்டாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் பல சர்ச்சைகளிலும் இந்த படம் சிக்கியது. அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட LKG பல பிரச்சினைகளையும் தடைகளையும் சந்தித்து பின் திரையில் வெற்றிகரமாக ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நயன்தாரா

நயன்தாரா

தனது முதல் படமான LKG வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் இயக்கும் "மூக்குத்தி அம்மன்" என்ற படத்தை தனது நண்பர் சரவணன் உடன் இணைந்து எழுதி இயக்கி மற்றும் நடித்தும் இருக்கிறார். இவருடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றது.

வெள்ளித்திரையில்

வெள்ளித்திரையில்

இவ்வாறு ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடங்கிய தனது வாழ்க்கையை தன்னுடைய பேச்சுத் திறமையால் தற்போது வெள்ளித்திரையில் சிறந்த காமெடி நடிகராகவும் மற்றும் இயக்குனராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர்

இயக்குனர்

ரேடியோ ஜாக்கி, காமெடியன், இயக்குனர் மேடைப் பேச்சாளர் என பல முகங்களைக் கொண்ட ஆர்ஜே பாலாஜி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ஜூன் 20 ஆம் தேதியான இன்று இவரது 35வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் நண்பர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X