ரோகிணி தியேட்டரில் அப்படி கத்திய பிறகு.. கருப்பு 2 வருமா?.. மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. கடந்த 15ஆம் தேதி வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. உலகளவில் மொத்தம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியிருக்கிறது. இதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் செம ஹேப்பியாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி; கருப்பு படத்தின் இரண்டாவது பாகம் குறித்து பேசியிருக்கிறார்.
சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் திரைப்படம் கருப்பு. சாய் அபயங்கர் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே பாலாஜி இயக்கியிருந்த மூக்குத்தி அம்மன் சூப்பர் ஹிட். சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கூட கிடைக்கவில்லை. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் சூர்யாவும், பாலாஜியும் கூட்டணி சேர்ந்து மேஜிக் செய்துவிடுவார்களா என்ற ஆவல் அனைவரிமுமே இருந்தது.

படம் சூப்பர் ஹிட்: கடந்த 15ஆம் தேதி படமானது வெளியானது. இத்தனை வருடங்களாக எதிர்பார்த்திருந்த கமர்ஷியலான சினிமா ஒன்று சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்துவிட்டது. சூர்யாவின் நடிப்பு, சண்டை காட்சிகள், குடும்பத்துக்கு தேவையான எமோஷன்கள் எல்லாம் படத்தில் சரியான கலவையில் இருந்ததால் ரசிகர்களிடம் நன்றாகவே கனெக்ட் ஆக்கிவிட்டது. இதன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.
கருப்பு 2 பற்றி ஆர்.ஜே.பாலாஜி: இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜே. பாலாஜி கருப்பு படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் மற்றும் பல விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் முதல் பெரிய சக்சஸ் இதுதான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உலகம் முழுவதும் கருப்பு படத்துக்கு வரவேற்பு பயங்கரமாக இருக்கிறது. அனைத்து ஊர்களிலும் எங்களை அன்பால் அடிக்கிறார்கள். அன்பு முத்தம் கொடுக்கிறார்கள். எங்கள் டீம் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்கள். ஜாலியாக இருக்கிறது.
முதல் பெரிய வெற்றி: தொடர்ச்சியான வெற்றி படங்களை இனிதான் கொடுக்க வேண்டும். எனக்கு இதுதான் முதல் பெரிய வெற்றி. இரண்டு நாட்கள் முன்பு சூர்யாவை மும்பையில் பார்த்தேன். அவர் ரொம்ப ஹேப்பியாக இருந்தார். அவருக்கு நான் என்ன சத்தியம் செய்தேனோ அதை இந்தப் படத்தில் நான் செய்துவிட்டேன். எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கிறோம். ரோகிணி தியேட்டரில் அப்படி செய்ததற்கு காரணம், 'படத்தை மக்கள் ரசிப்பதை நேரில் பார்க்கும்போது அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக செய்தேன்'.
எல்லாம் நல்லதே: படத்தில் திரிஷா நல்லவர்தானே. நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். கருப்பு 2 பற்றி கேட்கிறார்கள். அதான் ரோலிங் சூன் என்று போட்டிருக்கிறேனே. ரோகிணி தியேட்டரில் அப்படி கத்திய பிறகு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. படம் ஒரு நாள் தாமதமானது அனைவருமே இந்தப் படம் வெல்ல வேண்டும் என நினைக்க தொடங்கிவிட்டார்கள். கடவுள் இந்தப் படத்தை சரியாக கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications
