RJ பாலாஜி எங்கயா இருந்த இவ்வளவு நாளா? கம்பேக்னா இப்படி இருக்கனும்.. தலையில் வைத்து கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

சென்னை: சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த படம் கருப்பு தான் என்று கூறும் அளவுக்கு கருப்பு படத்தை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் இயக்குநர் RJ பாலாஜி. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான பல படங்கள் சரியாக போகவில்லை. சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றாலும் அவை எல்லாம், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானவை. 2024ஆம் ஆண்டு வெளியான கங்குவா, மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியது. ரெட்ரோ படம் தோல்வியைத் தவிர்த்தது.

இப்படி இருக்கையில் கருப்பு படம் சூர்யாவுக்கு கம் பேக் படமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில், உங்க நம்பிக்கை வீண் போகல, அந்த கருப்பன் கைவிடல என்பது போல படத்தை சூர்யாவுக்காக பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் இயக்குநர் RJ பாலாஜி என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

யாரு சாமி நீ: சில ரசிகர்களோ, RJ பாலாஜி இத்தனை நாட்களாக எங்கையா இருந்த, யாரு சாமி நீ இப்படி எங்க அண்ணனை பார்த்து பார்த்து செதுக்கி இருக்க. நீ நல்லா இருக்கனும்யா என்று பாராட்டி வருகிறார்கள். அதேபோல் சிலரோ, இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்காக நன்றிகள் அண்ணா என்றும் பதிவிட்டு வருகிறார்கள். சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் சிறப்பான இடைவேளை காட்சி என்றால் அது கருப்பு படத்தின் இடைவேளை காட்சி தான் என்று RJ பாலாஜியை மெச்சி வருகிறார்கள்.

RJ Balaji Delivers Powerful Comeback for Suriya with Karuppu Fans Celebrate Stunning Interval Block and Mass Theatre Response

RJ பாலாஜி: படம் குறிப்பிட்டது போல மே 14ஆம் தேதி வெளியாக வில்லை, ஆனால் மே 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியாகாததால், RJ பாலாஜி கண்ணீருடன் பேசி, அழுது கொண்டே வீடியோ பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு படத்தை எடுத்துட்டு நீ எதுக்கு அண்ணா அழுத, எங்க அண்ணனை தூக்கி உச்சத்தில் உட்கார வெச்சுட்ட என்று எல்லாம் சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்து வருகிறார்கள். சூர்யா ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருவதால் படத்திற்கு வரும் காலத்தில் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X