கருப்பு படம் அதில் சொதப்பியது.. அது எனக்கே தெரியும்.. ஆர்.ஜே. பாலாஜி இப்படி போட்டு உடைச்சிட்டாரே

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த கருப்பு திரைப்படம் கடந்த மாதத்தில் தியேட்டர்களில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ஓடிடியிலும் ரிலீஸானது. ஆனால் ஓடிடி ரிலீஸில் படத்தை பார்த்த ரசிகர்கள்; அதில் இருக்கும் ஏகப்பட்ட தவறுகளை எடுத்துப்போட்டு அடித்து வருகிறார்கள்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்த படம்தான் கருப்பு. சாய் அபயங்கர் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.கடந்த பல வருடங்களாகவே சூர்யாவுக்கு ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைக்காமல் இருந்த குறை இதில் தீர்ந்தது. மொத்தம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கெத்து காண்பித்தது. இந்த சந்தோஷத்தின் உச்சியில் ஆர்ஜே பாலாஜி, கேமராமேன், இசையமைப்பாளர் ஆகியோருக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் சூர்யா.

RJ Balaji Explains Karuppu OTT Trolls - Why Suriya s CGI Singam Scene Didn t Work
Photo Credit:

ஓடிடியில் செம அடி: தியேட்டர்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கருப்பு; சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது. இதிலும் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் இருந்த கிராஃபிக்ஸ் குறைகள் ரசிகர்களின் கண்களுக்கு தெரிய; அதை வைத்து கடுமையாக ட்ரோல் செய்தார்கள். முக்கியமாக, சிங்கம் கெட்டப்பில் வரும் சூர்யாவின் சிஜியை பார்த்து சிரித்தே விட்டார்கள் அவர்கள். இந்தப் படம் எப்படி தியேட்டர்களில் இவ்வளவு பெரிய ஹிட்டடித்தது என்ற கேள்வியையும் எழுப்பிவருகிறார்கள்.

Also Read
சங்கீதாவுடன் விஜய் சமாதானம்?.. தளபதியை அன்ஃபாலோ செய்த திரிஷா?.. ஆஹா இது என்ன புதுசா இருக்கு?
சங்கீதாவுடன் விஜய் சமாதானம்?.. தளபதியை அன்ஃபாலோ செய்த திரிஷா?.. ஆஹா இது என்ன புதுசா இருக்கு?

ஆர்.ஜே. பாலாஜி பேட்டி: இந்நிலையில் அதுகுறித்து பாலாஜியிடம் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஒரு Head Replacement ஷாட்டை தரமாக செய்ய வேண்டுமென்றால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தேவைப்படும். அதற்கான பணத்தையும் முன்பே கொடுத்துவிட வேண்டும். ஆனால் எங்களால் அந்த காலக்கெடுவுக்குள் பணத்தை செலுத்த முடியவில்லை. அதே நேரத்தி அந்த ஷாட்டை படத்திலிருந்து நீக்கவும் முடியாத சூழ்நிலை இருந்தது.

எனக்கு தெரியும்: ஓடிடியில் வெளியான பிறகுதான் சில காட்சிகள் அதிகம் விமர்சிக்கப்பட்டன. மற்ற அனைத்து காட்சிகளுக்கும் சிறப்பான வரவேற்புதான் கிடைத்திருக்கிறது. அதனால் எங்களுடைய தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அடுத்த முறை இன்னும் சிறப்பாக திட்டமிடுவோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றா, 'ரசிகர்களைவிடவும் அந்தத் தவறுகள் பற்றிய ஸ்க்ரீன் ஷாட்டுகள் என்னிடமே அதிகமாக இருக்கின்றன. அனைத்துமே தெரியும்.

சிங்கம் காட்சி: படத்தில் வரும் அந்த சிங்கம் காட்சியில் மிகவும் குறைவான ஷாட்டுகளையே பயன்படுத்தி சமாளித்தோம். தியேட்டர்களில் அதை பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. ஆனால் ஓடிடியில் பேசப்படும் என நாங்கள் முன்கூட்டியே எதிர்பார்த்துதான் இருந்தோம். ஏனெனில் அந்தக் காட்சியை முழுமையாக சரியாக செய்ய முடியவில்லை. பொதுவாக சண்டை காட்சிகளை ஹீரோவையும், ஆபத்தான காட்சிகளுக்காக ஸ்டண்ட் டூப்பையும் வைத்து படமாக்குவோம். அப்போது சில நேரங்களில் லைட்டிங், தொடர்ச்சி தொடர்பான பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X