கருப்பு.. RJ பாலாஜி ஆட்டைய போட்ட இடத்தை எல்லாம் தேடி தேடி எடுத்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சென்னை: இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான படம் கருப்பு. சூர்யா, த்ரிஷா, RJ பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து பட்டையைக் கிளப்பி வருகிறது. படத்திற்கு சூர்யா ரசிகர்களில் பெரும்பகுதியினர் கொடுத்த வரவேற்பு, படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த பாராட்டு, வசூல் நிலவரங்கள் உள்ளிட்ட பலவும் மொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆனால், படத்தின் பல காட்சிகள் இந்திய சினிமாக்கள், ஹாலிவுட் படங்கள், கொரியன் படங்கள் உள்ளிட்ட பல படங்களில், வெப் சீரிஸ்களில் இருந்து உருவப்பட்ட உள்ளது என்றும் அந்த காட்சிகள் எல்லாம் இதுதான் என்றும் நெட்டிசன்கள் பலரும் போட்டு தாளித்து வருகிறார்கள்.

அதுவும் இரண்டாம் பாதியில் வரும் ஒரு காட்சியில் கருப்பசாமியாக வரும் சூர்யா ஒரு காரையே இரண்டாக வெட்டுவார். இந்த காட்சிக்கு சூர்யா ரசிகர்கள் தியேட்டரில் சில்லறையை சிதற விட்டார்கள். ஆனால் இந்த காட்சி கொரியன் வெப் சீரிஸான Goblin the lonely and the great God என்ற வெப் சீரிஸில் வரக்கூடிய காட்சி என்று ஒரு நெட்டிசன் குறிப்பிட்டது மட்டும் இல்லாமல், அந்த காட்சியையும் பகிர்ந்துள்ளார். மேலும் காருக்குள் இருப்பவர்களின் சட்டை கிழிவது முதற்கொண்டு, கொரியன் வெப் சீரிஸைப் பார்த்து அப்படியே அட்டை காப்பி அடித்து வைத்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். இதை வலைப்பேச்சு பிஸ்மி பகிர்ந்து இயக்குநர் RJ பாலாஜி மற்றும் கருப்பு ஹேஸ்டேக்குகளைப் பகிர்ந்து, காப்பி கட் என்று கேப்ஷன் இட்டுள்ளார்.

RJ Balaji Faces Trolls Over Karuppu Copy Allegations Netizens Compare Scenes With Korean Dramas

கட் காப்பி பேஸ்ட்: அதேபோல் மற்றொரு இணையவாசியோ, படத்தின் பல காட்சிகள் ஆட்டையைப் போடப்பட்ட காட்சிகள் தான். RJ பாலாஜியின் முந்தைய படமான மூக்குத்தி அம்மன் படமோ பி.கே. படத்தின் கதைதான் என்றும், அதன் ரைட்ஸை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு நிலை இல்லாததால் ஏலியனுக்கு பதிலாக அம்மன் என்று வைத்துக் கொண்டே என்று பேட்டி ஒன்றில் RJ பாலாஜி தெரிவித்ததை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

RJ Balaji Faces Trolls Over Karuppu Copy Allegations Netizens Compare Scenes With Korean Dramas

அட்லீயை ஓரம் கட்டிய ஆர்ஜே பாலாஜி: இப்படி இருக்கும்போது இணையவாசிகள் பலரும் தமிழ் சினிமாவில் காப்பி அடிப்பது என்றால் அது இயக்குநர் அட்லீ தான் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருந்தால் அட்லீயை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இந்த RJ பாலாஜி இருக்கிறாரே என்று விமர்சித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X