Karuppu: கருப்பா கூட வந்து தெறிக்கவிட்டுடப்பா.. கருப்பு வெற்றி.. RJ பாலாஜி எமோஷனல் போஸ்ட்
சென்னை: இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகி மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட படமான கருப்பு படம் மே 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் மொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுவும் சூர்யாவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பிளாக் பஸ்டர் தியேட்டரிக்கல் வெற்றியாக இந்த படம் மாறியுள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கையில், படத்தின் இயக்குநர் RJ பாலாஜி இந்த வெற்றிக்காக எல்லைச்சாமி கருப்பனுக்கு நன்றி சொல்லு எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கருப்பு படம் இயக்குநர் RJ பாலாஜியின் மூன்று ஆண்டு கால உழைப்பு, பார்த்து பார்த்து படத்தை செதுக்கி உள்ளார், படத்தை உருவாக்குவதற்கு இடையில் ஏற்பட்ட பல பிரச்னைகளையும் எதிர்கொண்டு, மனம் தளராமல் படத்தை தரமாக உருவாக்கி உள்ளார். படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்களுக்கு தனது காரில் அமர்ந்து கொண்டு கொடுத்துக் கொண்டிருந்த RJ பாலாஜி, படம் மே 14ஆம் தேதி வெளியாகாததால், கண்ணீர் சிந்தி, அழுது கொண்டே பேசினார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்: இப்படி இருக்கையில் பெரும் போராட்டத்திற்கு பின்னர் படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படம் ரசிகர்களின் காத்திருப்புக்கு ஏற்ற வகையில் தரமாக உருவாக்கி கொடுத்துள்ளார், RJ பாலாஜி. இதனால் ரசிகர்கள் RJ பாலாஜிக்கு எமோஷனலாக நன்றி தெரிவித்து வருகிறார்கள். சூர்யாவின் கெரியரில் தி பெஸ்ட் இன்டர்வல் சீன் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் பலர் மொத்த படத்தையும் கத்தி கத்தி தான் பார்த்துக் கொண்டு இருந்தேன் என்று எல்லாம் பதிவிடுள்ளனர்.

எமோஷனல் போஸ்ட்: இப்படி இருக்கையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார் RJ பாலாஜி. படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து, படம் முடிந்தது, ஆக்ரோஷமாக கத்தினார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து மிகவும் எமோஷனலான RJ பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், " BLOCKBUSTER response ku நன்றி ..!!! கருப்பா கூட வந்து தெறிக்கவிட்டுடப்பா...!! " என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு கீழ் சூர்யா ரசிகர்கள் பலரும் நன்றிகளை மாறி மாறி தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications