ஆனாலும்.. இந்த ஆர்ஜே பாலாஜிக்கு குசும்பு கொஞ்சம் கூடத்தான்.. என்ன வேலை பண்ணியிருக்கார் பாருங்க!

சென்னை: ஆர்ஜே பாலாஜி ஷேர் செய்திருக்கும் மூக்குத்தி அம்மன் பட போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பிடன் 290 இடங்களை கைப்பற்றி வாகை சூடியுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஸ்பெஷல் வாழ்த்து

ஸ்பெஷல் வாழ்த்து

கமலா ஹாரீஸ் மன்னார்குடியை பூர்விகமாக கொண்டவர் என்பதால் தமிழகத்தில் இருந்து அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கிறது. அங்கு வெடி வெடித்தும் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தலைவர்கள் வாழ்த்து

தலைவர்கள் வாழ்த்து

அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோபைடனுக்கும், துணை அதிபராகப் போகும் கமலா ஹாரிஸூக்கும் உலக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மூக்குத்தி அம்மன் துணையால்

மூக்குத்தி அம்மன் துணையால்

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தை வைத்து குசும்பு செய்திருக்கிறார் அதன் இயக்குநரான ஆர்ஜே பாலாஜி. அதாவது ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மூக்குத்தி அம்மன் பட போஸ்டரை ஷேர் செய்து, மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

நயன்தாரா ஆசிர்வாதம்

இதில் அந்த போஸ்டர்தான் மேட்டரே.. மாஸ்க் அணிந்தப்படி கைகளை கோர்த்து உயர்த்தி பிடித்திருக்கும் ஜோபிடன், கமலா ஹாரிஸூக்கு மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா ஆசிர்வாதம் வழங்குவது போல் உள்ளது அந்த போஸ்டர்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் 14-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ஷேர் செய்திருக்கும் இந்த போஸ்டர் பலரது கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது. லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X