twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்ஜே பாலாஜி செய்த உதவி - மனிதநேயத்தைப் பாராட்டிய இயக்குநர்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : நடிகரும், தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு செயற்கை கை பொருத்துவதற்கு உதவி செய்துள்ளார். இந்தத் தகவலை 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களின் இயக்குநர் ராஜு முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இது குறித்த பதிவொன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் ராஜு முருகன் சற்று முன்பு பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவில் ஆர்ஜே பாலாஜிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராஜு முருகன். அவர் எழுதிய பதிவு கீழே...

    RJ Balaji helps to a person from Dharmapuri

    "தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பூஜா என்ற பெண்ணின் தம்பிக்கு சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் ஒரு கை போய்விட்டது. 'உடனடியாக செயற்கை கை பொருத்த வேண்டும்... அதற்கு 2 லட்சத்துக்கு மேல் செலவாகும்' என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். எளிய குடும்பமான அவர்களுக்கு இது இயலாத தொகை.

    'ஜோக்கர்' நேரத்தில் அறிமுகமாகியிருந்த பூஜா எனக்கு தொலைபேசியில் இதை தெரிவித்தார். நான் இதை ஒரு தகவலாக ஆர்.ஜே. பாலாஜியிடம் சொன்னேன். உடனடியாக அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து செயற்கை கை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர்.

    'நல்லபடியா கை வெச்சுட்டாங்க சார்... இப்போ தம்பி ஸ்கூட்டில்லாம் ஓட்றான்...' என பூஜா நேற்று பேசினார். நன்றி ஆர்.ஜே. பாலாஜி தோழர்! தொடர்ந்து இம்மாதிரியான நற்செயல்களை முன்னெடுத்து கொண்டிருக்கிற அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் 'வி ட்ரஸ்ட்' 'சென்னை மைக்ரோ' அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள்!" என அந்தப் பதிவில் கூறியுள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.

    English summary
    Actor and Anchor RJ Balaji has helped to attach artificial hand for a person from Dharmapuri. Raju Murugan, director of the films 'Kukkoo' and 'Joker', has posted this information on his Facebook page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X