ஆத்தாடி... நயன்தாராவின் அர்ப்பணிப்பு இருக்கே... ம்ஹூம்... மூக்குத்தி அம்மனை புகழும் ஆர்.ஜே.பாலாஜி
சென்னை: மூக்குத்தி அம்மன் படத்துக்காக, நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
எல்கேஜி படம் மூலம் ஹீரோவான ஆர்ஜே.பாலாஜி, அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். இதில் ஹீரோயினாக நடிக்கிறார் நயன்தாரா.
மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

நயன்தாரா விரதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தை ஆர்ஜே பாலாஜி, என்ஜே.சரவணன் இணைந்து இயக்குகின்றனர். படத்துக்காக, நயன்தாரா விரதம் இருந்து நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன்
படப்பிடிப்பின்போது, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அங்குள்ள சில கோயில்களுக்குச் சென்றுவந்தார் நயன்தாரா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

அளவில்லா சுதந்திரம்
அவர் கூறும்போது, படத்தின் 90 சதவீதக் காட்சிகள் முடிந்துவிட்டது.
ஐசரி கணேஷ் போன்ற தயாரிப்பாளர் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் இருக்கும்போது எதற்கும் கவலைப்பட வேண்டாம். கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம், நமது அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பதுதான்.

நிலைத்திருக்கும்
இன்னும் ஒரு வாரப் படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருக்கிறது. இப்படத்துக்காக நயன்தாராவின் விரதம் இருந்திருக்கிறார். இந்தப் படம் அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக நிலைத்திருக்கும்' என்கிறார்.


Click it and Unblock the Notifications











