டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி.. கருப்பு பற்றி புலம்பிய ஆர்.ஜே. பாலாஜி.. என்ன ஆனது தெரியுமா?
சென்னை: டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதி போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இந்தியாவும், நியூசிலாந்தும் மோதிய அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று போட்டியின்போது வர்ணனை செய்த ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படம் பற்றி புலம்பியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பை போட்டிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின. லீக், சூப்பர் 8, அரையிறுதி என நடந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து இந்தத் தொடரை தொடங்கினார்கள். இறுதி போட்டிக்கு இந்திய அணியும், நியூசிலாந்து அணிகளும் தகுதி பெற்றன. இரண்டுமே வலுவான அணி என்பதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதில் கடும் போட்டி நிலவியது.

இந்தியா வெற்றி: நேற்று அகமதாபாத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை எடுத்தது. சஞ்சௌ சாம்சன், அபிஷே ஷர்மா, சிவம் தூபே உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சஞ்சு நேற்று தொடர்ச்சியாக மூன்றாவது அரை சதத்தை அடித்து அசத்தினார். 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிற்ங்கிய நியூசிலாந்தால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பும்ரா மொத்தம் நான்கு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி, உலகக்கோப்பையை நடத்தும் நாடே முதன்முறையாக வெற்றி பெற்றது உள்ளிட்ட சாதனைகளை படைத்திருக்கின்றன.
ஆர்.ஜே.பாலாஜி கமெண்ட்ரி: இந்தப் போட்டியில் நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி கமெண்ட்ரி செய்தார். வழக்கம்போல் படபடவென்று பேசிய அவர் கருப்பு படம் பற்றியும் பேசினார். அவர் கமெண்ட்ரியில் பேசுகையில், "நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ஐபிஎல் தொடரில் ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால் நான் எடுத்த கருப்பு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை" என குறிப்பிட்டிருந்தார். இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
எப்போது ரிலீஸ்?: ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியின்போது தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் மாதத்தில் கருப்பு ரிலீஸாகிவிடும் என பாலாஜி கூறியிருந்தார். அப்படி இருக்கும் சூழலில் எதற்காக இப்போது புலம்ப வேண்டும். ஒரு வேளை ஏப்ரல் ரிலீஸிலிருந்தும் படம் தள்ளி போகுமோ என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். முதன்முறையாக சூர்யாவை வைத்து பாலாஜி இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















