அய்யோ ஜெயா டிவி ஆட்கள் வந்திருக்கும்போது இப்படி சொல்லிட்டேனே: தனுஷை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜி
சென்னை: பாகுபலி 2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே. பாலாஜி தனுஷை கலாய்த்துள்ளார்.
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகிறது.
பாகுபலி 2 ரிலீஸுக்கு முன்பு பாகுபலி படத்தை மீண்டும் வெளியிட்டனர்.

இசை வெளியீடு
பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

ஆர்.ஜே. பாலாஜி
இசை வெளியீட்டு விழாவில் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, நாசர், தமன்னா, தனுஷ் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆர்.ஜே. பாலாஜி தொகுத்து வழங்கினார்.

தனுஷ்
பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த தனுஷை ஆர்.ஜே. பாலாஜி மேடைக்கு வருமாறு அழைத்தார். தனுஷ் மேடைக்கு வந்தபோது, உங்க பவர் பாண்டி படம் ரிலீஸாகுது. அய்யோ அது ப. பாண்டியாச்சே தெரியாமல் பவர் பாண்டி என்று கூறிவிட்டேன். ஜெயா டிவி ஆட்கள் வேறு வந்துள்ளார்கள் என்றார்.

சிரிப்பு
பவர் பாண்டி தனுஷை ஆர்.ஜே. பாலாஜி கலாய்த்தபோது அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இசை வெளியீட்டு விழா திருவிழா போன்று பிரமாண்டமாக நடந்தது.


Click it and Unblock the Notifications