யப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே
Recommended Video

சென்னை: ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி(ஸ்டாச்சு ஆப் யூனிட்டி) சிலையையும்(statue of unity) ஆர்.ஜே. பாலாஜி விட்டு வைக்கவில்லை.
ஆர்.ஜே. பாலாஜி எழுதி நடித்துள்ள எல்.கே.ஜி. படம் நாளை ரிலீஸாக உள்ளது. ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய்க்கு இணையாக பாலாஜியின் படத்திற்கும் அதிகாலை காட்சி கிடைத்துள்ளது.
இந்நிலையில் படம் நாளை ரிலீஸாவதை நினைவூட்டி ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார் பாலாஜி.
பாலாஜி
இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை அருகே பிரதமர் மோடி வெள்ளை உடை அணிந்து நின்றதை கலாய்க்கும் வகையில் உள்ளது இன்று வெளியான எல்.கே.ஜி. போஸ்டர். நடிகை குத்து ரம்யா கூட மோடியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு இது என்ன பறவையின் எச்சமா என்று கலாய்த்திருந்தாரே.
விட்டு வைக்கவில்லையா
எல்.கே.ஜி. படத்தில் தான் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாரபட்சமில்லாமல் கலாய்த்திருக்கிறீர்கள் என்றால் இந்த சிலையையும் விட்டு வைக்கவில்லையா பாலாஜி. நீங்க நடத்துங்க ராசா.
ரசிகர்கள்
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடத் தான் இந்த சிலை போஸ்டரை வெளியிட்டார் பாலாஜி. அவர் நினைத்தது நடந்துவிட்டது.
காலை காட்சி
படம் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் யோசித்து யோசித்து டயர்டாகிவிட்டார்கள். இந்த எதிர்பார்ப்பால் தான் எல்.கே.ஜி. படத்திற்கு காலை காட்சி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











