சீரியல் கில்லரா ஆர்.ஜே. பாலாஜி? புதுப்படத்தின் போஸ்டரில் மிரட்டுகிறாரே?

சென்னை: தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பின் முலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்து, தான் நடித்த படங்களில் கவனம் ஈர்த்தார். நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கவும் செய்தார். இந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இதுமட்டும் இல்லாமல் ஐபிஎல், உலகக்கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகின்றார். ஆர்.ஜே. பாலாஜி இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி தந்து 39வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ள தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

RJ Balaji

இந்த படத்தினை மணிகண்டனை வைத்து குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தற்போது ஆர்.ஜே. பாலாஜியை வைத்து தனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகின்றது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்த குட் நைட் மற்றும் லவ்வர் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மில்லியன் டாலர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெற்றுக் கொடுத்தது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஃபீல் குட் படம் வெளியாகியுள்ளது என குட் நைட் படத்தை பலரும் பாராட்டினர். இதனால் மணிகண்டனை வைத்து தனது அடத்த படத்தையும் மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதுவும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால், தமிழ் சினிமாவில் தற்போது ஃபீல் குட் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களில் மில்லியன் டாலர்ஸ் நிறுவனமும் தன்னை இணைத்துக் கொண்டது.

ஆர்.ஜே. பாலாஜி தான் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களில் காமெடியோடு சேர்ந்து சமூக கருத்துகளை பேசும் கதைகளில் நடித்துள்ளார். மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் ஆர்.ஜே. பாலாஜிதான் இயக்குநர். அதன் பின்னர் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் ஆர்.ஜே பாலாஜி நடிக்கவுள்ள இந்த படத்தின் கதை எந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் மத்தியில் ஆவல் இருக்கின்றது.

ஆர்.ஜே. பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், அர்.ஜே. பாலாஜி ரத்தகறை உள்ள கத்தியில் கேக் வெட்டுகின்றார். பாரில் அமர்ந்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜியின் உடையில் ரத்தக்கறை உள்ளது. மேலும் கேக்குக்கு அருகில் துப்பாக்கியும் சிறிய சுத்தியலும் உள்ளது. இதுமட்டும் இல்லாமல், அவருக்கு அருகில் மதுபான பாட்டிலும் உள்ளது. போஸ்டரில் உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நக்கலாக வெறியுடன் சிரிப்பதைப் போலவும் ஒரு கையில் மெழுகுவர்த்தியுடனும் ஒரு கையில் லைட்டருடனும் உள்ளார்.

இந்த போஸ்டர் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் போஸ்டரைப் பார்க்கும்போது ஆர்.ஜே. பாலாஜி ஒரு சீரியல் கொலைகாரனாக இருப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. இதுமட்டும் இல்லாமல் ஆர்.ஜே. பாலாஜி ஒரு நெகடிவ் ரோலில் நடிக்கின்றாரா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X