8 பேக் வைச்சி … ஆக்சன் திரைப்படங்களில் நடிக்க போறேன்.. ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்!
சென்னை : எந்த வருடமும் இல்லாத அளவிற்கு தீபாவளிக்கு ரிலீஸாகும் திரைப்படங்களில் எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
கொரானா சூழலில் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கும் என சொல்லப்படும் நிலையில் சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன், உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
நயன்தாரா முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்ட போகின்ற நிலையில் ஆர் ஜே பாலாஜி இதுபற்றிய ரசிகர்களின் கேள்விக்கு விரைவில் 8 பேக் வைத்து கேஜிஎப் போன்ற ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத நடிகராக
ரேடியோவில் ஆர்ஜேவாக தனது கலப்பான பேச்சின் மூலம் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட ஆர்ஜே பாலாஜி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இயக்குனராக உருவெடுத்துள்ளார்
டைமிங் சென்ஸ்ஸில் இவரை அடித்துக் கொள்ள முடியாது என்று சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் சரி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி தனது தனித்துவமான பேச்சின் மூலம் அனைவரையும் ஈர்த்து சிரிக்க வைத்து வரும் ஆர் ஜே பாலாஜி இப்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
எல்கேஜி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பாலாஜி நடித்து இயக்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

தீபாவளிக்கு ஓடிடியில்
நடிகை நயன்தாரா இதுவரை பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் முதல் முறையாக அம்மன் வேடத்தில், நடித்திருக்கும் இந்த திரைப்படம் நயன்தாராவின் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கின்ற நிலையில் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

கண்டிப்பாக பண்ணலாம்
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் புரொமோஷன்கள் ஒருபுறம் தடபுடலாக நடந்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஆர் ஜே பாலாஜியின் ரசிகர் ஒருவர் கேஜிஎப் போன்ற ஆக்சன் படங்களில் உங்களை எப்பொழுது பார்க்கலாம் என கேட்டதற்கு, கண்டிப்பாக பண்ணலாம் ஆனால் இப்போதைக்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லை ஆக்சன் படங்கள டைரக்ட் வேணா பண்ணலாம்.

நடிப்பதில் கவனம்
கேஜிஎப் போன்ற ஆக்சன் திரைப்படங்களில் நடிப்பதற்கு இங்க பலர் இருக்கின்றனர், நான் ஒரு சாதாரண மானுடன் எனக்குத் தகுந்த பல கதைகள் இங்கு இருக்கு அதில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன். அப்படி கேஜிஎப் போன்ற ஆக்சன் திரைப்படங்களில் நடிப்பதாக இருந்தால் 2057ல் நடிக்கிறேன் அதுக்குள்ள ஜிம்முக்கு போய் உடம்ப 8 பேக் ஆக்கிருவோம். என தனக்கே உரித்தான பாணியில் ஆர் ஜே பாலாஜி கூறியிருக்க பலரும் இவரிடம் இருந்து ஆக்சன் திரைப்படங்களையும் எதிர்பார்க்கின்றனர் என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications