பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: ஆர்ஜே பாலாஜி பாலிவுட் படம் ஒன்றை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஜே, நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்டவர் ஆர்ஜே பாலாஜி. நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார்.
எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அண்மையில் ஆர்ஜே பாலாஜி, நயன்தாராவை இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது.

பாலிவுட் படம்
ஓடிடியில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம ஹிட்
அதாவது 2018 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் பதாய் ஹோ. முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக வெளியான இந்தப் படம் செம ஹிட்டானது.

இயக்கி நடிக்கவுள்ளார்
29 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 220 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது. இந்நிலையில், இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி தமிழில் அவரே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிவிப்பு
மேலும் இப்படத்திற்கு வீட்ல விசேஷங்க என பெயர் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











