அட்லீ காப்பியடிப்பதாக சொன்னார்கள்.. நானேகூட ட்ரோல் செய்தேன்.. ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

சென்னை: இயக்குநர் அட்லீ இப்போது இந்தியாவிலேயே டாப் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். கடைசியாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பெரிய வெற்றியை ருசித்தார். இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதுவும் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில் அட்லீ குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. மௌன ராகம் பேட்டர்னில் அந்தப் படத்தின் கதை இருந்தாலும் அவரது ரிச்சான மேக்கிங் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து வரிசையாக தெறி, மெர்சல், பீஸ்ட் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களில் பீஸ்ட் மட்டும் படுதோல்வியை சந்தித்தது. மற்ற இரண்டு படங்களும் அவரை பெரிய இயக்குநராக மாற்றியது.

RJ Balaji Praises Atlee s Journey Calls His Confidence and Work Ethic Inspiring
Photo Credit:

ஹிந்தியில் அட்லீ: அதன் பலனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அதன்படி ஜவான் திரைப்படம் உருவானது. அதுவும் காப்பி சர்ச்சையில் சிக்கியதுதான். இருப்பினும் வட மாநிலங்களில் படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு. இதன் காரணமாக படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. ஷாருக்கின் குட் புக்கிலும் அட்லீ இடம்பிடித்துவிட்டார். ஒரே ஹிந்தி படம் அவரது மார்க்கெட்டையும், சம்பளத்தையும் உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

ராக்கா அட்லீ: ஜவான் படத்துக்கு பிறகு தெலுங்கு உச்ச நட்சத்திரம் அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா படத்தை இயக்கிவருகிறார். இதில் தீபிகா படுகோனே முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். மேலும் மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள் என்றும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க; சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி பேட்டி: இந்நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் ஆர்ஜேவாக இருந்தபோது ராஜா ராணி படத்தை ட்ரோல் செய்திருக்கிறேன். ஆனாலும் அட்லீயிடம் இருந்த அந்த நம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது. ஜி.கே.விஷ்ணு போன்ற புதியவரை விஜய் படத்துக்கு அவர் தேர்வு செய்தது அசாதாரணமான ஒன்று. ஷாருக்கானுடன் அவர் பணிபுரிந்த படம் எப்படி பெரிய வெற்றியை பெற்றது என்பதை பாருங்கள்.

பெரிய சாதனை: ஜவான் திரைப்படத்தின் மூலம் அவர் பெரிய சாதனையை செய்தார். இப்போது அல்லு அர்ஜுனுடன் ராக்கா படத்தை செய்துவருகிறார். அவருடைய படங்கள் மற்ற படங்களை போல் இருக்கின்றன என பலரும் ட்ரோல் செய்தார்கள். ஆனால் இறுதியில் முடிவு என்ன?. எப்போதும் உங்களை கீழே இருக்கி மோசமாக பேசினாலும், அவர் படங்கள் மூலம் பதிலடி கொடுத்தார். அட்லீயின் உழைப்பும், அவர் வேலை செய்யும் விதமும் என்னை மிகவும் இன்ஸ்பையர் ஆக்கிவிட்டது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X