எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி

By

சென்னை: மூக்குத்தி அம்மன் படம் சத்தியமாக வேற லெவலில் இருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

காமெடி வேடங்களில் நடித்துவந்த ஆர்ஜே.பாலாஜி, 'எல்கேஜி' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சித் சம்பத், ஜே.கே.ரித்திஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதையடுத்டு ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். இதில் ஹீரோயினாக நடிக்கிறார் நயன்தாரா.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தை என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜியும் இயக்குகிறார்.

விரதம் இருந்து

விரதம் இருந்து

படத்துக்காக, நயன்தாரா விரதம் இருந்து நடித்தார். படப்பிடிப்பின்போது, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அங்குள்ள சில கோயில்களுக்குச் சென்று வந்தார் நயன்தாரா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.

முக்கியமான படம்

'அம்மன் கேரக்டரில் நடிப்பதற்காக, முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறார். இது, அவர் சினிமா வாழ்வில், முக்கியமான படமாக இருக்கும். அவர் நடிக்கும் கதாபாத்திரம், படத்துக்கு பெரும் பலமாக இருக்கும். ஐசரி கே.கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தால், படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்பட தேவையில்லை' என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எல்.கே.ஜி ஒரு வருடம்

எல்.கே.ஜி ஒரு வருடம்

இந்நிலையில், அவர் ஹீரோவாக அறிமுகமான எல்.கே.ஜி படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் ஆகியுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. 'ஒரு சின்னப் படத்தை, மறக்க முடியாத படமாக ஆக்கிவிட்டீர்கள். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி. மூக்குத்தி அம்மன், உங்களை டபுள்மடங்காக மகிழ்ச்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அம்மன் அருளுக்கு காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் கமென்ட் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X