சிகரெட்டுக்கு நான் அடிமை.. அந்த பழக்கத்தால் இழந்தது கொஞ்ச நெஞ்சமில்லை.. ஆர். ஜே. பாலாஜி!

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவை வைத்து கருப்பு என்கிற படத்தை இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா பல வருடத்திற்கு பின் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், கல்லூரி விழாவில் பேசிய பாலாஜி, தனக்கு இருந்த கெட்டப்பழக்கத்தில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை பேசி உள்ளார்.

அதில், 2005 ஆம் ஆண்டு நான் ரேடியோ ஜாக்கி பணியில் சேர்ந்தேன். மீடியாவிற்குள் வந்து கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இப்போது, என்னிடம் உதவி இயக்குனராக வரும் 22,23 வயதுடையவர்கள் மூன்று மாதம் நன்றாக சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். அதன் பிறகு சோர்வடைந்து விடுகிறார்கள். என்ன காரணம் எனக்கு கேட்டால் சோர்வாக இருக்கிறது, மனம் அழுத்தமாக இருக்கிறது, இரண்டு மாதம் பிரேக் எடுக்கலாம் என நினைக்கிறேன் என்று என்னிடம் சொல்கிறார்கள் இதை கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

RJ Balaji Karuppu Suriya
Photo Credit:

ஆர்.ஜே.பாலாஜி பேச்சு: அண்மையில் நான் ரஜினி சாரிடம் பேசிய போது, அவர் அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் போட்டு வைத்து இருக்கிறார். அவர் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 50 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. 75 வயதிலும் அதே அதே உத்வேகத்துடன் ரஜினி இருக்கும் போது, உங்களால் இருக்க முடியாதா? இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லும் விஷயம் நம்முடைய உடம்பு தான் முக்கியமான ஒன்று. அந்த உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடம்பை கெடுக்கும் எந்தவிதமான கெட்ட பழக்கத்திற்கும் தயவு செய்து பழக்கமாகிவிடாதீர்கள்.

கெட்டப்பழக்கம்: நான் கல்லூரிகள் படிக்கும்போது, சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டேன். அந்தப் பழக்கத்தை விடுவதற்கு எனக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆனது. அந்தப் பழக்கத்தால் என்னுடைய தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. என்னால் சில நாட்கள் பேச முடியவில்லை, என்னுடைய தொழிலே ரேடியோவில் பேசுவது தான், அதை என்னால் செய்யமுடியாமல் போனதால், அந்த பயத்தில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டேன். அதன்பிறகு, எந்த கெட்ட பழக்கத்திற்கும் நான் அடிமையாகி விடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்போது நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு நாளைக்கு 12, 13 மணி நேரம் உற்சாகமாக வேலை செய்கிறேன். இதனால், இன்றைய மாணவர்களுக்கு நான் சொல்லும் ஒரே ஒரு விஷயம் உங்களுடைய உடலை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X