twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘எப்படியும் அரியர் தான் வைக்கப் போற, படத்துக்கு போலாமா?’ ஃபிரண்ட்லி அம்மா..ஆர்.ஜே பாலாஜி சுவாரஸ்யம்

    |

    சென்னை : ஆர் ஜேவாக தனது கேரியரை தொடங்கியவர் ஆர்ஜே பாலாஜி. தனது எதார்த்தமான பேச்சாலும், கலகலப்பான கவுண்டர்களாலும் பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

    Recommended Video

    Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

    தனது அம்மாவை பற்றி இவர் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஆர் ஜே பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம் திரைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்து சமயத்தில் இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றது.

    777 Charlie Review: நாய்க்கு நன்றியுணர்ச்சி மட்டுமில்ல.. நட்பும் இருக்கும்.. 777 சார்லி விமர்சனம்!777 Charlie Review: நாய்க்கு நன்றியுணர்ச்சி மட்டுமில்ல.. நட்பும் இருக்கும்.. 777 சார்லி விமர்சனம்!

    முதல் பயணம்

    முதல் பயணம்

    ஆர் ஜே வாக தனது கேரியரை தொடங்கியவர் பாலாஜி. இவரது எதார்த்தமான பேச்சும், கலகலப்பான கவுண்டர்களும் இவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது. அப்பொழுதே ஆர்ஜே பாலாஜிக்கு பல ரசிகர்கள் உருவாகி விட்டனர். இப்படி எதார்த்தமாக பேசுபவர் சினிமா துறைக்கு நடிக்க வந்தால் எப்படி இருக்கும் என்று பல ரசிகர்களும் எதிர்பார்த்ததுண்டு. ஆர் ஜேவாக இருக்கும் பலருக்கும் நடிகராக வேண்டும் என்று எண்ணம் இருப்பதுண்டு. அதேபோல் பாலாஜியும் நல்ல பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த சமயத்தில், எதிர் நீச்சல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் பாலாஜி. இவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல படங்களில் நடித்து நடிகராக பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    நெக்ஸ்ட் லெவல்

    நெக்ஸ்ட் லெவல்

    இவர் எழுதி, நடித்த எல்கேஜி திரைப்படம் மெகா ஹிட்டானது. அதன் பிறகு, இவர் எழுதி இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் வேற லெவல் ஹிட் ஆனது. நடிப்பு மட்டுமில்லாமல் தன்னால் எழுதி இயக்கவும் முடியும் என்று நிரூபித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் இயக்குநரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில், நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்து இருப்பார் ஒரு நடுத்தர வீட்டு பையனாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் அசத்தியிருந்தார். இந்த படத்தில் நயன்தாரா ஆர்ஜே பாலாஜி இருவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்ததுடன், சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார் ஆர்ஜே பாலாஜி.

    வீட்டுல விசேஷம்

    வீட்டுல விசேஷம்

    அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்த ஆர் ஜே பாலாஜி, தற்போது இயக்கி வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீட்டுல விசேஷம். குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய காமெடி படமாக இந்த படம் அமைந்திருந்தது. ஊர்வசி, சத்யராஜ் போன்ற பிரபலமான நடிகர்களை இயக்கவும், அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஆர்ஜே பாலாஜி. ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை ஊர்வசியுடன் பாலாஜி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இவர் தன் அம்மாவைப் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    வா படத்துக்கு போவோம்

    வா படத்துக்கு போவோம்

    தன் அம்மாவைப் பற்றி ஆர் ஜே பாலாஜி கூறியதாவது.. இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கணக்கு பரிட்சை சமயத்தில் நல்லா படிச்சிட்டியா என்று கேட்டுள்ளார் அவரது அம்மா, வழக்கம்போல் திருதிருவென்று முழித்த ஆர்ஜே பாலாஜியை பார்த்து அவரது அம்மா சரி பரவால்ல வா, எப்படியும் அரியர் தான வைக்க போற வா, நாம விருமாண்டி படத்திற்கு போகலாம் என்று கூறியுள்ளார். பொதுவாக படிக்கவில்லை என்றால் படிக்கச் சொல்லி திட்டும் அம்மாவை தான் நான் பார்த்துள்ளேன்.

    மிகவும் நெகிழ்ச்சியாக...

    மிகவும் நெகிழ்ச்சியாக...

    ஆனால் என் அம்மா என்னை படத்திற்கு அழைத்துச் சென்றார். எப்போதும் தனித்துவமாகவே யோசிப்பார் என் அம்மா என்று மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் ஆர் ஜே பாலாஜி. இதுவே நான் சினிமாவில் வெற்றி பெற காரணமாக அமைந்தது என்று வழக்கம்போல் சிரித்தபடி கூறுகிறார் நடிகர் ஆர் ஜே பாலாஜி.இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

    English summary
    RJ Balaji Remembers his Childhood Memories with his Mother, Video Goes viral
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X