கருப்பு படத்தின் மெகா ஹிட்.. ரஜினிகாந்த் அழைத்து ஆர்.ஜே.பாலாஜியிடம் சொன்னது இதுதான்

சென்னை: சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான கருப்பு திரைப்படம் மெகா ஹிட்டாகி 200 கோடி ரூபாயக்கும் மேல் வசூலித்திருக்கிறது. இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும் இன்னொரு படத்திலும் இதே கூட்டணி தொடரும் எனவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இந்நிலையில் கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியை பாராட்டியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கும் ரஜினிகாந்த் கடைசியாக கூலி திரைப்படத்தில் நடித்து சூடு போட்டுக்கொண்டார். மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமாரியக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும், நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசனுடனும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இரண்டு படங்கள் மீதும் அபார நம்பிக்கையை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

RJ Balaji Reveals Rajinikanth s Emotional Call After Karuppu Success This Is Suriya s Biggest Hit
Photo Credit:

ரஜினியின் அந்த குணம்: ரஜினிகாந்த்திடம் இருக்கும் ஏகப்பட்ட குணங்கள் பலரால் பாராட்டப்படுபவை. அதிலும் ஒரு படம் வெளியாகி அது நன்றாக இருந்து சூப்பர் ஹிட்டடித்துவிட்டால் எந்த ஈகோவும் பார்க்காமல் சம்பந்தப்பட்ட படக்குழுவினரை நேரிலோ அல்லது ஃபோனிலோ அழைத்து பாராட்டு தெரிவிப்பார் ரஜினி. அதிலும் தன்னை விமர்சித்தவர்கள், கிண்டல் செய்தவர்களாக இருந்தாலும்; படம் நன்றாக இருந்தால் அவர்களை அழைத்து பாராட்டி பரிசினை வழங்குவார். பிரதீப் ரங்கநாதன், லோகேஷ் கனகராஜ், அஸ்வத் மாரிமுத்து என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும்.

Also Read
3 வருடங்கள் உழைத்தும் பயன் இல்லையே.. கங்குவா சூர்யா பற்றி ஆர்.ஜே. பாலாஜி ஓபன்
3 வருடங்கள் உழைத்தும் பயன் இல்லையே.. கங்குவா சூர்யா பற்றி ஆர்.ஜே. பாலாஜி ஓபன்

கருப்பு படத்துக்கு பாராட்டு: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாகவும், திரிஷா ஹீரோயினாகவும் நடித்த கருப்பு திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு ஒரு தரமான வெற்றி இப்படத்தின் மூலம் கிடைத்துள்ளது. மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் அந்தப் படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியை ரஜினி பாராட்டியிருக்கிறார்.

என்ன சொன்னார்?: பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "என் படத்தை பார்த்துவிட்டு ரஜினியிடமிருந்து எனக்கு ஒரு ஃபோன் வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. உண்மையிலேயே அவர் என்னை ஃபோனில் அழைத்தார். ஒரு படம் நன்றாக இருந்தால் அந்த டீமை ரஜினி பாராட்டுவதை சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். பாலாஜி சூப்பர், சூப்பர், சூப்பர். சாதிச்சிட்டீங்க எவ்வளவு பெரிய ஹிட்; சீக்கிரமே சந்திப்போம் என கூறினார். அப்படி அவர் சொன்னதும் எனது வாழ்க்கையில் இன்னொரு பாக்ஸ் டிக் அடித்த மாதிரி இருந்தது. இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது சூர்யாவுக்கு பெரிய ஹிட்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X