RJ Balaji: "சிவகார்த்திகேயன் படம் மட்டும் காப்பி இல்லையா..?” பங்கமாக கலாய்த்த ஆர்ஜே பாலாஜி

சென்னை: ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனின் படத்தை ட்ரோல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி
ரேடியோ ஜாக்கியாக மக்களிடம் பிரபலமான ஆர்ஜே பாலாஜி, தற்போது சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நாளை வெளியாகிறது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை கடந்த வாரம் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிங்கப்பூர் சலூன் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்ஜே பாலாஜி பங்கேற்று வந்தார்.

 RJ Balaji: RJ Balaji trolled Sivakarthikeyan films at Singapore Saloon Promotions

அப்போது சிவகார்த்திகேயன், ஹிப் ஹாப் தமிழா ஆகியோரின் படங்களை ஆர்ஜே பாலாஜி பங்கமாக கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் ஹிப் ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு', சிவகார்த்திகேயனின் 'கனா' படங்களைப் போல இருப்பதாக வரும் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் ஹிப் ஹாப் தமிழா நடித்த இரண்டு படங்களும், சிவகார்த்திகேயனின் 2 படங்களையும் மிக்ஸியில் போட்டு அடித்தது மாதிரி இருக்கே என்று தொகுப்பாளர் கலாய்க்க, அதற்கு காமெடியாக பதிலளித்தார் ஆர்ஜே பாலாஜி.

சிங்கப்பூர் சலூன் மற்ற படங்களின் காப்பிலாம் இல்லை எனக் கூறினார். அதேபோல் கனா, மீசைய முறுக்கு படங்கள் போல சிங்கப்பூர் சலூன் இருக்கும் என்றால், சிவகார்த்திகேயனின் படம் எதிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது, அப்போ அவங்களும் காப்பி எடுத்தார்கள் என பங்கமாக கலாய்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக சிங்கப்பூர் சலூன் மாதிரி ஆயிரம் படங்கள் இதுக்கு முன்பே வந்துவிட்டன. இப்போது ஆயிரத்து ஒன்றாவது படமாக சிங்கப்பூர் சலூன் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

 RJ Balaji: RJ Balaji trolled Sivakarthikeyan films at Singapore Saloon Promotions

அதேபோல் சிங்கப்பூர் சலூன் படம் பற்றி பாசிட்டிவாக சொல்லவில்லை என்றாலும் நெகட்டிவாக விமர்சிக்க வேண்டாம் என ஜாலியாக கமெண்ட் அடித்தார் ஆர்ஜே பாலாஜி. முன்னதாக சிங்கப்பூர் சலூன் படத்தில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் சிம்பு அதிலிருந்து விலகியதால் ஆர்ஜே பாலாஜி இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்குப் பின்னர் நாளை தான் தமிழில் இரண்டு படங்கள் வெளியாகின்றன. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்துடன், ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூனும் ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X