RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை ‘அவனா நீ’ என கேட்ட ரசிகர்... அட பாவமே இதுக்காகவா இப்படியொரு கேள்வி!
சென்னை: ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனிடையே ஆர்ஜே பாலாஜியை ரசிகர் ஒருவர் 'அவனா நீ' என கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜியை அவனா நீ என கேட்ட ரசிகர்
ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி. இப்போது ஹீரோவாகவும் கலக்கி வரும் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகியுள்ளது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

முன்னதாக சிங்கப்பூர் சலூன் நன்றாக வரவில்லை என்பதால், இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என ஆர்ஜே பாலாஜியே தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் கேட்டுக் கொண்டாராம். ஆனால் இயக்குநர் கோகுலின் வற்புறுத்தல் காரணமாக தான் சிங்கப்பூர் சலூன் ரிலீஸானதாக சொல்லப்படுகிறது. இறுதியாக இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது தான் மிச்சம்.
இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் தன்னை கலாய்த்தது குறித்து மனம் திறந்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. அதாவது ஒருபேட்டியில் தனக்கு பிடித்த படம் மம்முட்டியின் காதல் தி கோர் எனக் கூறியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான காதல் தி கோர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தன்பாலின உறவு குறித்து உருவாகியுள்ள காதல் தி கோர், விமர்சன ரீதியாக பெரும் சக்சஸ் ஆனது. தற்போது ஓடிடியில் வெளியாகி அங்கும் சூப்பரான வெற்றிப் பெற்றுள்ளது. சமீபத்தில் நான் பார்த்த படங்களில் காதல் தி கோர் தான் பெஸ்ட் என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். அந்த பேட்டியில் கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், ஆர்ஜே பாலாஜியை பார்த்து 'அவனா நீ' எனக் கேட்டுள்ளார்.
அதாவது ஓரினச்சேர்க்கை பின்னணியில் உருவான படம் பிடிக்கும் என்பதால், ஆர்ஜே பாலாஜியையும் அப்படி ஒருவராக ரசிகர் புரிந்துகொண்டதாக தெரிகிறது. இதனை பேட்டி ஒன்றில் கூறியுள்ள ஆர்ஜே பாலாஜி, இப்படியெல்லாம் ரசிகர்கள் இருந்தால் என்ன செய்வது என்று வேதனையை வெளிப்படுத்தினார். மம்முட்டியின் காதல் தி கோர் படத்தை மலையாள திரையுலகமே கொண்டாடியது. ஆனால் ரசிகர்கள் இப்படி தவறாக புரிந்துகொள்வது தான் வேதனை என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











