RJ Balaji: "சொகுசு கார்... பூனை மசாஜ்.." RJ பாலாஜிக்கு வந்த வாழ்வு... மனுசன் மஜா பண்றாருய்யா!

சென்னை: ரேடியோ ஜாக்கியாக மக்களிடம் அறிமுகமான ஆர்ஜே பாலாஜி, தற்போது சினிமாவில் நடிகர், இயக்குநர் என மாஸ் காட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. இதனிடையே ஆர்ஜே பாலாஜியின் சொகுசு கார், பூனை மசாஜ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆர்ஜே பாலாஜிக்கு வந்த வாழ்வு தான்
ஜனவரி 25ம் தேதி ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகிறது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் முதலில் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் அதன்பின்னர் ஆர்ஜே பாலாஜி நடிக்க, இப்போது படமும் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. இந்நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.

 RJ Balaji: RJ Balajis luxury car video is trending on Social Media

இன்னொரு பக்கம் சிங்கப்பூர் சலூன் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்ஜே பாலாஜி கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், ஆர்ஜே பாலாஜியின் சொகுசு கார், பூனை மசாஜ் பற்றிய வீடியோ வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. அது குறித்து ஆர்ஜே பாலாஜியே விளக்கம் கொடுத்துள்ளார். 92.7 Big FM மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக பல சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுத்துள்ள அவரே தற்போது ஹீரோவாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் சில படங்களில் கேமியோ ரோலில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, பின்னர் காமெடி ரோல், ஹீரோ என அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுவிட்டார். தான் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் போது ஹீரோக்கள் பலரும் கேரவன் டைப் சொகுசு கார்கள் வைத்திருப்பதை பார்த்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. பின்னர் நாமும் இப்படி ஒரு கார் வாங்க வேண்டும் என முடிவு செய்த அவர், சினிமாவில் ஹீரோவானதும் டெல்லி சென்று இப்படியொரு சொகுசு காரை ரெடி செய்தாராம்.

கிட்டத்தட்ட சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல் போல பல அதிநவீன வசதிகளுடன் இந்த கார் தயார் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சலூன் படத்திற்காக இந்த காரில் பயணித்தபடியே பேட்டிக் கொடுத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. அப்போது தான் தனது சொகுசு கார் பற்றி தனக்கே உரிய பாணியில் காமெடியாக விவரித்துள்ளார். அப்போது அந்த கார் சீட்டில் மசாஜ் செய்யும் வசதி இருப்பதாக கூறிய ஆர்ஜே பாலாஜி, நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என உணர வைத்துள்ளார்.

 RJ Balaji: RJ Balajis luxury car video is trending on Social Media

அதன்படி, பூனை மசாஜ், ஸ்நேக் மசாஜ் என பல வகைகளில் அந்த கார் சீட்டில் செட்டிங் செய்யப்பட்டுள்ளதாம். அதாவது அந்த சொகுசு காரின் சீட்டில் அமர்ந்தபடி ஒரு பட்டனை அழுத்தினால், முதுகில் பூனை நடப்பது போல மசாஜ் செய்யுமாம். அதேபோல், பாம்பு போல வளைந்து வளைந்தும் மசாஜ் செய்யும் சீட்டிங் செட் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல வசதிகளுடன் வலம் வரும் காரை, பல கோடிகள் செலவு செய்து ரெடி செய்துள்ளதாக ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக இருந்தபோது தான் ஆசைப்பட்ட காரை, இப்போது தனது குடும்பத்திற்காக ஆர்ஜே பாலாஜி வாங்கியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எப்படி இருந்த மனுஷன் இப்போ இப்படி மஜா பண்றாரே என ஆர்ஜே பாலாஜியை வாழ்த்தி கமெண்ட்ஸும் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X