»   »  18 வயசுப் பசங்களுக்காக... "அடல்ட் வீடியோ" வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி

18 வயசுப் பசங்களுக்காக... "அடல்ட் வீடியோ" வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டுப் போடுவதை வலியுறுத்தி நடிகர் ஆர் ஜே பாலாஜி வெளியிட்டிருக்கும் வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சமூகப் பொறுப்புடன் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடும் ஆர்ஜே பாலாஜி, தற்போது தேர்தலுக்குத் தகுந்தார் போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

RJ Balaji's Adult Video now Goes Viral

எப்போ போட்டீங்க? என்பது இந்த வீடியோவின் தலைப்பு.இந்த வீடியோவை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டுமாம்.

அதற்கு கீழே உள்ளவர்கள் போய் டோரா புஜ்ஜி விளையாடுங்க என்ற டைட்டில் கார்டுடன் தொடங்கும் வீடியோவில், ஓட்டுப் போடுவதின் அவசியத்தை பாலாஜி வலியுறுத்தியிருக்கிறார்.

18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த வீடியோவில், ஓட்டுப் போடுவதின் அவசியம் மற்றும் அத்தியாவசியம் குறித்து பாலாஜி விளக்கியிருக்கிறார்.

வழக்கம் போல இணையத்தைக் கலக்கி வரும் இந்த வீடியோ, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

English summary
RJ Balaji's Adult Video Goes Viral on All Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil