Don't Miss!
- Finance
தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?
- News
பிரதமர் மோடியை எதற்காக நேரில் சந்திக்கிறேன் தெரியுமா? காரணத்தை விளக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
- Automobiles
60 லட்சம் கிலோ எடையை இழுத்து கொண்டு அசால்டாக 120 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
- Lifestyle
இந்த 4 ராசிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ரொம்ப பிடித்த ராசிகளாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Technology
Gmail Tips- ஒரே க்ளிக்கில் மொத்த Inbox-ஐ டெலிட் செய்யலாம்!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு கடைசி தங்கச்சி பிறந்தது.. ஆர்ஜே பாலாஜி சொன்ன குடும்ப ஸ்டோரி!
சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் மூன்று தந்தைகள் கதை மற்றும் வீட்ல விசேஷம் படத்தில் வயசான காலத்தில் அம்மா கர்ப்பமாகும் கதையெல்லாம் கிட்டத்தட்ட ஆர்ஜே பாலாஜி ரியல் லைஃப்பிலேயே நடந்துள்ளதாக அவர் சொல்லும் குடும்ப ஸ்டோரி தலையை சுற்ற வைக்கிறது.
நடிகராகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் ஆர்ஜே பாலாஜி.
அவர் இயக்கி நடித்த வீட்ல விசேஷம் படம் கடந்த வாரம் வெளியாகி இந்த வாரமும் மக்கள் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மற்றதை விடுங்க...வாரிசு படத்தில் பிரவு – குஷ்பு சேர்ந்து நடிக்கிறாங்க...இதை கவனிச்சீங்களா?

வீட்ல விசேஷம் வெற்றி
ஆர்ஜே பாலாஜி மற்றும் என்ஜே சரவணன் இணைந்து இயக்கிய வீட்ல விசேஷம் திரைப்படம் தங்களுக்கு போதுமான லாபத்தை கொடுத்த வெற்றி படம் என சமீபத்தில் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் வீடியோவில் கூறியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. சாதாரண அதுவும் ரொம்பவே கஷ்டப்படுற ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஆர்ஜே, காமெடி நடிகர், ஹீரோ, இயக்குநர் என உயர்ந்திருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

ஒரு தம்பி மூன்று தங்கைகள்
ஆர்ஜே பாலாஜிக்கு ஒரு தம்பியும் மூன்று தங்கச்சிகளும் உள்ளனர். அவரது அப்பா மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் அப்பாவை போலவே குடும்ப பொறுப்பை விட்டு சில காலம் ஒதுங்கி விட்டதாகவும், அதன் காரணமாக அடிக்கடி சென்னையின் பல இடங்களில் வாடகை வீட்டை மாற்றி இருக்கிறோம் என பழைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது குடும்பத்தை பற்றிய மேலும், சில ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றிலும் கூறியிருக்கிறார்.

காலேஜ் படிக்கும் போது கடைசி தங்கச்சி
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆவதை போல எங்கள் வீட்டில் ஒரு புதிய குழந்தை பிறக்கும். அதனால், நான் கல்லூரி படிக்க அட்மிஷன் வாங்கும் போது கைக் குழந்தையுடன் எங்கம்மா வந்ததை பற்றி எனக்கு எந்த கவலையும் பெரிதாக தெரியவில்லை. எங்க வீடே ஒரு அம்யூஸ்மென்ட் பார்க் மாதிரி தான் இருக்கும் என தனது சோகங்களை மறைத்துக் கொண்டு சந்தோஷமாக பேசி உள்ளார்.

குழந்தை பிறப்பதில் சிக்கல்
ஆர்ஜே பாலாஜிக்கு திருமணம் ஆகி அவரும் அவரது மனைவியும் குடும்ப கஷ்டத்தை நினைத்து 5 ஆண்டுகளுக்கு குழந்தையை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விட்டனர். ஆனால், திடீரென ஆர்ஜே பாலாஜியின் தாத்தா இறந்ததும் மனைவிக்கு குழந்தை நின்று விட்டதாம். தாத்தா தான் குழந்தையா வராருன்னு நினைச்சி பெத்துக்கிட்டோம். ஆனால், அந்த கர்ப்ப கால நாட்கள் எங்களுக்கு பெரும் சோதனையாகவே அமைந்தது என்றும் பேசி இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.