»   »  ‘இந்த’ ஹீரோயினை வைத்து படமெடுத்தால் செலவு மிச்சமாகும்…! ஆர்ஜே பாலாஜி தரும் ஐடியா!

‘இந்த’ ஹீரோயினை வைத்து படமெடுத்தால் செலவு மிச்சமாகும்…! ஆர்ஜே பாலாஜி தரும் ஐடியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தயாரிப்பாளரின் செலவைக் குறைக்க ஆர்ஜே.பாலாஜி தந்த ஐடியா!-வீடியோ

சென்னை: மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜாவை வைத்து படம் இயக்கினால் செலவு மிச்சம் என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடித்துள்ள திரைப்படம் பூமரங். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

RJ Balaji’s idea to reduce production cost!

அப்போது பேசிய நடிகர் ஆர்யா, இப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் பற்றி கூறும்போது, அர்ஜுன் ரெட்டி திரைப்பட இசையமைப்பாளர் என்பதால் அவர் ஆந்திராவிலிருந்து வந்தவர் என நினைத்ததாகவும், ஆனால் அவர் கேகே நகரில் பிறந்து வளர்ந்தவர் என்பது பிறகுதான் தெரியும் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்ஜே.பாலாஜி, "இப்போதெல்லாம் நடிகர்கள் ஏன் அதிகமாக கருத்து சொல்கிறார்கள் எனக் கேட்கிறார்கள். கருத்து சொல்லாமல் இருக்குமளவுக்கு பாதுகாப்பான சமூகத்தில் நாம் இல்லை" எனக் கூறி சமீபத்தில் சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை நினைவு கூர்ந்தார்.

படத்தின் நடிகைகள் பற்றி பேசும்போது, "இப்படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா இருவருமே தமிழ் தெரிந்தவர்கள். நன்றாக நடிக்கிறார்கள். வட இந்தியாவிலிருந்து நடிகையைக் கூட்டி வந்து கஷ்டப்பட்டு படம்மெடுப்பதை விட, இதுபோன்ற தமிழ்தெரிந்த நடிகைகளை பயன்படுத்தினால் தயாரிப்பாளருக்கு செலவு குறையும்" எனக் குறிப்பிட்டார்.

இப்படத்தில், அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உப்பன் படேல், சுகாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரதன் இசையமைத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Boomarang movie audio launch function happened in Chennai recently. Rj Balaji talked about actress Megha Aakash and Induja. If producer use a actress like Indhuja and Megha it will be helpful to reduce production cost.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more