twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா

    By Siva
    |

    Recommended Video

    LKG Movie: ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது- வீடியோ

    சென்னை: ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆர்.ஜே. பாலாஜி எழுதி ஹீரோவாக நடித்துள்ள எல்.கே.ஜி. படம் வரும் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது. அரசியல் பேசும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது.

    நான் கடத்தினேனா?: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார் நான் கடத்தினேனா?: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்

    அதிகாலை காட்சி

    அதிகாலை காட்சி

    ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் படங்களுக்கு கிடைக்கும் அதிகாலை காட்சி ஆர்.ஜே. பாலாஜியின் படத்திற்கு கிடைத்துள்ளது. அது எப்படி இந்த பாலாஜி படத்திற்கு அதிகாலை காட்சி கிடைத்தது என்று வியக்காதவர்களே இல்லை. சிலர் அவரிடமே ட்விட்டரில் கேட்டுவிட்டனர்.

    பாலாஜி

    மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் மட்டுமே அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்ததாக தியேட்டர் உரிமையாளர் வாட்ஸ்ஆப்பில் தெரிவித்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மெரிட்டில் மட்டுமே இது கிடைத்துள்ளது என்கிறார் பாலாஜி.

    ட்விட்டர்

    உண்மையை சொல்லுங்க பாலாஜி என்ன கள்ளத்தனம் செய்து அதிகாலை காட்சியை பெற்றீர்கள் என்று ஆளாளுக்கு கேட்க அய்யோ இது வெறும் மெரிட் என்று டைப் செய்து கை வலித்துவிட்டதால் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் அவர்.

    சந்திப்போம்

    22ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சந்திப்போம் என்று பாலாஜி ட்வீட் போட்டதை பார்த்து சிரிப்பவர்கள் விழுந்து விழுந்து சிரித்தாலும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வோம் என்று கூறும் ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    English summary
    RJ Balaji starrer LKG which is hitting the screens on february 22nd has got 5 am show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X