ஆர் ஜே பாலாஜி வந்து பேசினா தான் அது சரிபட்டு வரும்
சென்னை : ஜியோசாவ் இந்தியாவில் இணைய ஆடியோ நிகழ்ச்சி சேவையை 2016 ஏப்ரல் முதல் வழங்கி வரும் நிறுவனம் ஆகும். கதைசொல்லிகள், சுயாதீன தயாரிப்பாளர்கள், தன்முனைப்பு கலைஞர்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. காமெடி முதல் பாப் கலாச்சாரம் வரை, விளையாட்டு, அரசியல், சினிமா என பலவகையிலான 100க்குமேற்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு அளித்து, பலமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் முன்னனி நிறுவனமாக வளர்ந்து வரும் ஜியோசாவ் தமிழ் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக RJ பாலாஜி தொகுத்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் எனும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது

ஜியோசாவ் நிறுவன உலக சந்தையின் விநியோக துணை அதிகாரி ஆதித்யா காஷ்யப் பேசியது...
முதலில் பாட்காஸ்ட் என்னன்னு எனக்கும் புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது. இது ஒரு ரேடியோ ஷோ இணையத்தில் இருக்குற ரேடியோ. நான் ஏன் இதுல அப்படின்னு கேட்டா , இது இப்ப முடிவு பண்ணியதில்ல. வெகுகாலம் முன்பே முடிவு செய்தது. ஜியோசாவ் உலகம் முழுக்க இயங்குற நிறுவனம், இவங்களோட இணைஞ்சு என்ன பண்ணலாம்னு நினைச்சு 100க்கும் மேல ஐடியா பிடிச்சு இத பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். இந்த நிகழ்ச்சி இன்றைய சூழ்நிலையில அவசியம்னு தோணுது.

ஆர் ஜே பாலாஜி பேசியது....

முதலில் பாட்காஸ்ட் என்னன்னு எனக்கும் புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது. இது ஒரு ரேடியோ ஷோ இணையத்தில் இருக்குற ரெடியோ. நான் ஏன் இதுல அப்படின்னு கேட்டா , இது இப்ப முடிவு பண்ணியதில்ல. வெகுகாலம் முன்பே முடிவு செய்தது. ஜியோசாவ் உலகம் முழுக்க இயங்குற நிறுவனம், இவங்களோட இணைஞ்சு என்ன பண்ணலாம்னு நினைச்சு 100க்கும் மேல ஐடியா பிடிச்சு இத பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். இந்த நிகழ்ச்சி இன்றைய சூழ்நிலையில அவசியம்னு தோணுது.


இத மாத்துற நிகழ்ச்சியா, பேச மறுக்கற மறக்கற விசயங்கள பேசற நிகழ்ச்சியா இது இருக்கும். இதுல சமூகத்தின் காரசார விசயங்கள் மட்டுமில்லாம விளையாட்டு, சினிமா என எல்லாத்தையும் பத்தி பேசற நிகழ்ச்சியா இருக்கும். இது எனக்கு புதுசா இருக்கற அதே நேரம் சமூகத்துக்கு சொல்ல வேண்டிய கடமையாவும் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்றார்


Click it and Unblock the Notifications











