மூக்குத்தி அம்மனின் முதல் பாதி ஷுட்டிங் ஓவர்.. ஆர்ஜே பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாதி ஷூட்டிங்கை முடித்து விட்டார் ஆர்.ஜே.பாலாஜி.
தான் முதன் முதலில் நடித்து அறிமுகமான எல்.கே.ஜி படத்திற்கு பிறகு இயக்குவதாக அறிவித்தப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை சரவணன் என்ற மற்றுமொரு இயக்குனர் பாலாஜி உடன் இணைந்து இயக்கியிருக்கிறார்.

படத்தில் பாலாஜி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் மூத்த நடிகர் மெளலி மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Recommended Video
மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா இப்படத்தில் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் காட்சியாக்கப்பட்டது.
தற்போது கிடைத்துள்ள ஒரு தகவலின் படி படத்தின் முதல் பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் இதனை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் 44 நாட்களில் முடித்ததாகவும் பாலாஜி தனது சமுக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும்.மேலும் சில முக்கிய காட்சிகள் மட்டுமே படமாக்க உள்ளதாகவும், மற்றும் படம் எடுக்கும் போது ஒத்துழைப்பு தந்த கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி என்றும் நயன்தாரா இந்த நாட்களில் நடித்து இதனை நினைவில் வைத்து கொள்ளும் படி மாற்றினார் என்றும் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











